Breaking News
மின்சாரத்தை பாய்ச்சி ஒருவரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை
.
காலி, இமதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொரடுஹேனகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு காலி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த கொலை சம்பவம் கடந்த 2000 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர் சட்டவிரோத மின்சார கம்பிகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை பாய்ச்சி நபரொருவரை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேக நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
காலி, இமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.