Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு.

.

இலங்கை பாடகி யோகானியின் இசைநிகழ்ச்சியொன்று இன்று லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான அரங்கில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு  புலம் பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

யொகானி போர்க்குற்றவாளிகளை போற்றும் பாடல்களை பாடியதை சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன டிசில்வாவின் மகளான யொகானி அவரை பாராட்டி பாடியுள்ளதை  புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இனப்படுகொலையை ஆதரிப்பவரை,இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை பாரட்டுபவரை லண்டனில் மாத்திரமல்லவேறு எங்கும் இசைநிகழ்;ச்சிகளை நடத்துவதற்கு அனுமதிக்ககூடாது தமிழ் இளைஞர் அமைப்பின் பிரித்தானியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் இது மிகவும் மனிதாபிமானமற்றது சீற்றத்தை ஏற்படுத்தகூடியது என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வை புறக்கணிக்கவேண்டும் ஏற்பாட்டாளர்கள் இந்த நிகழ்வை இரத்துசெய்யவேண்டும் என தமிழ் இளைஞர் அமைப்பின் பிரித்தானியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலைக்கு ஆதரவாக குரல்கொடுப்பவருக்கு லண்டனில் நிகழ்வுகளில் ஈடுபடுவதற்கு இடமில்லை என தெரிவித்துள்ள பிரித்தானியாவின் தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் மகேஸ் அவர் எங்கள் போராளிகளை பயங்கரவாதி என அழைத்தார்,யுத்த குற்றவாளிகளிற்காக பாடினார் என தெரிவித்துள்ளார்.

யொகானி தனது தந்தையின் குற்றங்களை கண்டிக்காத வரை,யுத்த குற்றவாளிகளிற்கான தனது ஆதரவை விலக்கிக்கொள்ளாதவரை, இனப்படுகொலை குறித்த விசாரணைக்கான சர்வதேச பொறிமுறைக்கு ஆதரவளிக்காதவரை அவர் இங்கு நிகழ்வுகளை நடத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ள அரங்கின் உரிமையாளர்கள் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டவேளை யொகானியின் பின்னணி குறித்து தங்களிற்கு தெரியாது,தாங்கள் இந்த நிகழ்விற்கு பொறுப்பில்லை என தெரிவித்துள்ளனர்.