Breaking News
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியுடன் இணைந்துபணியாற்ற தயார்: அமெரிக்கா
.
இலங்கை வாக்காளர்கள் தமது நாட்டை எதிர்காலத்தில் வழிநடத்த தேர்வு செய்யும் வேட்பாளருடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஜனநாயக தினத்தைக் குறிக்கும் வகையில் அவர் தனது எக்ஸ் தளத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில்,
”தேர்தல் மூலம் அவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நீதி மற்றும் ஒவ்வொரு தனிநபருக்குமான கருத்து சுதந்திரத்தை உறுதி செய்தல் போன்ற, எந்தவொரு வலுவான மற்றும் நிலையான ஜனநாயகத்தின் கொள்கைகளை இந்த நாள் கொண்டாடுகிறது.
இலங்கையின் ஜனநாயகத்திற்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதிப்படுத்துவது மிக முக்கியமான நடவடிக்கை” என குறிப்பிடப்பட்டுள்ளது.