Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

யாழ் பல்கலை ஆசிரியர்கள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகளை நிறைவேற்ற பல்கலைக்கழக பேரவை அங்கீகாரம்!

,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு உபவேந்தர் எடுத்த தீர்மானத்துக்கு பல்கலைக்கழக பேரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்ரீ சற்குணராசா தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகள் தொடர்பில் நேற்றைய தினம் (29) பல்கலைக்கழக விசேட பேரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.

இதன்போது, பதவி விலகிய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுதல் மற்றும் அவர் மீண்டும் பீடாதிபதியாக பதவியேற்பதற்குரிய சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அங்கீகாரத்தை பல்கலைக்கழக பேரவை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பில் உயர் கல்வியமைச்சு கோரிய அறிக்கையை அந்த அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்ரீ சற்குணராசா தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வகுப்பு புறக்கணிப்பு தொடர்வதாக அந்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பி.ஐங்கரன் தெரிவித்ததுடன், நேற்று இடம்பெற்ற பல்கலைக்கழக விசேட பேரவைக் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதென அறியமுடிவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

எனினும் நாளைய தினம் (30) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் விசேட பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. அந்த கூட்டத்தின் பின்னரே தங்களது சங்கம் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பி.ஐங்கரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.