Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

விகாரை அகற்றப்படும் வரையில் போராட்டம் தொடரும்- எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

,

‘மக்களின் காணி உரிமையில் இந்த அரசு கைவைக்கின்றது என்றால் ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கைவைப்பதாக அமையும்’ என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படுள்ள நிலையில், குறித்த விகாரை அகற்றப்படும் வரையில் நாம் தொடர்ந்தும் போராடுவோம் என தெரிவித்த எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவிக்கையில்,

“தையிட்டியில் மக்களின் காணிகளுக்குள் கட்டப்பட்ட விகாரையை அகற்றி தமது காணிகளை மீட்டுத் தருமாறு காணி உரிமையாளர்கள் எங்களிடம் கேட்டிருந்தனர்.

அதற்கமைய நாங்கள தொடர்ச்சியாகப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்தோம். இதற்கமைய இந்த விகாரை அகற்றப்படும் வரையில் நாம் ஓயாது தொடர்ந்தும் போராடுவோம்.

இங்கு சட்டங்கள், விதிமுறைகளை மீறி இந்த விகாரையை இராணுவம் கட்டி முடித்துள்ளது. ஆனாலும், இந்த விகாரை சட்டபூர்வமானது அல்ல என்பதை விகாரைக்கென்று வருகின்ற அப்பாவி சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.  

இந்த விகாரை கட்டப்பட்டதாலே இங்கு புத்தர் என்ற பெயரில் நடக்கின்ற அநியாயங்களை அப்பாவி சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விகாரையைத் தொடர்ந்து வைத்திருப்பதில் அர்த்தம் இல்லாமல் போகும்.

போராட்டங்கள் தொடர்ந்து பலமாக அமைகின்றபோதுதான் தீர்வை அடையலாம். இதற்கமைய பலரும் இன்றைக்கு வந்து இருந்தனர். அனைவரதும் ஆதரவினால்தான் இந்தப் போராட்டம் வெற்றியளித்து இருக்கின்றது.

இதேவேளை, இன்னுமொரு விடயத்தையும் நாங்கள் சொல்ல வேண்டியுள்ளது. அதாவது நாங்கள் இனவாதியோ மதவாதியோ அல்ல. ஆனால், இங்கே இருக்கக்கூடிய மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அடாத்தாக கட்டப்பட்ட விகாரையை எதிர்த்துப் போராடுகின்றோம்.

தமிழ் மக்களின் உரிமைக்கு எதிரான செயற்பாடுகள் எதுவானாலும் நாங்கள் எதிர்ப்போம். இன்றைய போராட்டத்தை விடவும் அடுத்த பௌர்ணமிக்கு அதிகளவில் மக்கள் திரள வேண்டும்.  

மேலும் உரிமைக்கான எமது இந்தப் போராட்டம் இன்னும் இன்னும் பலமடையும். இதற்குப் பின்னால் ஒட்டுமொத்த இனமும் அணிதிரளும். மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து வந்திருப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பாக சட்டத்தின் ஆட்சியைப் பற்றிக் கதைக்கும் அரசுதான் ஆட்சியில் இருக்கின்றது.

சட்டத்தை மீறி எப்படி ஒரு பொதுமகன் கட்டடம் கட்டினால் அது உடனடியாக அகற்றப்படுகின்றதோ அதேபோன்றே சட்டவிரோத விகாரையையும் அகற்ற வேண்டும்.

இது அகற்றபடாவிட்டால் ஒவ்வொரு இடத்திலும் நடக்கும் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.  

மக்களின் காணி உரிமையில் இந்த அரசு கைவைக்கின்றது என்றால் ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கைவைப்பதாக அமையும்” – என்று குறிப்பிட்டார்.