Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

4 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரதி பொலிஸ் மாஅதிபர்களாக நியமனம்

28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உடன் அமுலாகும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நால்வர் பிரதி பொலிஸ் மாஅதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, மட்டக்களப்பு பிரிவிற்கு பொறுப்பான பதில் பிரதி பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் M.N.S.மென்டிஸ் 

மேல் மாகாண போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் W.P.J.சேனாதீர

மொனராகலை பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.M.A.P.களுபஹன 

இரத்தினபுரி பிரிவிற்கான பிரதி பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் D.M.M.A.B.மஹகிரிஉல்ல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அத்துடன் 5 பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு புதிய நியமனங்களும் இடமாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே 28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த அனைத்து நியமனங்களும் இடமாற்றங்களும் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.