பலதும் பத்தும் : - 25,02,2025 'வேலை முடிந்தது.' 'வேலை சரி'.
.

- வெளி அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார். ஜெனீவா நேரப்படி இன்று மாலை 3:30 மணியளவில் அமைச்சர் பேரவையில் உரையாற்றவுள்ளார். ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHCR) 58வது அமர்வில் பங்கேற்பதற்காகஇ அமைச்சர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின் போதுஇ அமைச்சர் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற இராஜாங்கச் செயலாளருடன் இருதரப்பு சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
அதேபோல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், பாலஸ்தீன இராச்சியத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் வர்ஷன் அகபெகியன் மற்றும் பல தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன்,சுவிட்சர்லாந்து மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
- கடந்த சில தினங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஜூன் 02 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற கூட்டம் நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத முதல் வாரத்திலோ உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஜூன் 02 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற கூட்டம் நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத முதல் வாரத்திலோ உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை தொடர்பாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவினால் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 19 ஆம் திகதிஇ கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன்படிஇ கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (24) கைது செய்யப்பட்டனர்.
நீர்கொழும்புஇ கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த பிங்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க என்ற 23 வயது இளைஞனும்இ அதே முகவரியைச் சேர்ந்த சேசத்புர தேவகே சமந்தி என்ற 48 வயது பெண்ணும் கொலை தொடர்பான தகவல்களை மறைத்துஇ குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கொலையின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் தம்பி என்பது தெரியவந்துள்ளது.
- இன்று சமூகத்தில் உள்ள அனைவரும் அச்சத்திலும் சந்தேகத்திற்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில்இ பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாட்டில் நடந்து வரும் வன்முறை கலாசாரம் குறித்து ஆராயப்பட்டது. இந்த வன்முறை சார் அலையை தடுக்க முறையான திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என்று கூறப்பட்டது. எனவேஇ இந்த குற்ற அலையை கட்டுப்படுத்த பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படாது என்றும்இ மாறாக குற்றவியல் நடவடிக்கை முறை சட்டம் மேலும் பலப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த கொலைக் கலாச்சார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுகின்றது. எனவே குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? என எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று (25) சபையில் கேள்வி எழுப்பினார். சுற்றுலாத்துறை முன்னேற்றம் கண்டு வரும் இந்நேரத்தில்இ சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக அமைந்து காணப்படுகின்றது. இது பொருளாதாரத்தையும் பாதிப்பதாக அமையும், எனவே இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
- முப்படையில் இருந்து தப்பிச்சென்றுள்ள அனைத்து உறுப்பினர்களையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் எயார்வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்இ முன்னறிவிப்பின்றி முப்படையில் இருந்து தப்பிச்சென்றுள்ள அனைவரையும் கைது செய்யுமாறு முப்படைகளின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 'வேலை முடிந்தது.' 'வேலை சரி' .ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் என்று கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவாவைக் கொன்ற பிறகுஇ சந்தேக நபரான வழக்கறிஞர் வேடமணிந்த பெண்இ அவரது சகோதரருக்கு 'வேலை முடிந்தது' 'வேலை சரி' என்று குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கணேமுல்ல சஞ்சீவாவை சுட்டுக் கொன்ற பிறகு தப்பி ஓடிய வழக்கறிஞர் வேடமணிந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்திஇ தனது தம்பியுடன் குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டு வந்ததாகவும் பொலிஸார் அறிந்துள்ளனர்.
இந்த சர்ச்சைக்குரிய கொலைக்குப் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அல்லஇ மாறாக வழக்கறிஞர் வேடமணிந்த சந்தேக நபரான பெண்தான் என்ற தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளது.
- இஸ்லாமிய மதத்தை அவமதித்ததற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்ததால்இ தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
5000 ரூபாய் ரொக்கம் மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதிஇ கொழும்பு நீதவான் நீதிமன்றம்இ இஸ்லாம் மதத்தை அவமதித்ததற்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதித்தது.
- பாதாள உலகக் குழுக்களுடன் வெளிநாடுகளிலிருந்து செயற்படுகின்ற நபர்களை இனங்கண்டுஇ அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.