Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வெறும் சில வாரங்களில் நூற்றுக்கணக்கான பொய்களை கூச்சமில்லாமல் பேசிய, சட்டை மற்றிய JVP யான NPP!

மந்தமான பொருளாதார வளர்ச்சி, கடன் நெருக்கடி, வறுமை என தலைவிரித்தாடும் நெருக்கடிகளுக்கு பொய்களை பேசி வித்தைகள் காட்டுவதால் தீர்வு கிடைக்க போவதில்லை.

கடந்த சில வார உள்ளுராட்சி தேர்தல் பிரச்சார மேடைகளில்,
ஈஸ்டர், 19 குண்டுத் தாக்குதல் சதியின் பிரதான சூத்திரதாரிகளை 21 ஆம் திகதிக்கு முன் அம்பலப்படுத்துவதாக வழங்கிய ஜேவிபியின்  வாக்குறுதி பொய்யாக்கிருக்கின்றது. 
புத்தாண்டு வாழ்த்து SMS  செய்திகளை தவிர்த்ததன் மூலம் ரூபா 98 மில்லியனை சேமித்தாக பகிரங்கப்படுத்தியதும் பொய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
2024 புரட்டாதியில்   20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே  Foreign reserve  ஆக இருந்தது எனவும், தாங்களே  அதனைத்  6.19 பில்லியன் அமெரிக்க டொலர்களாக  உயர்த்தியதாகவும்  ஜேவிபி அறிவித்ததும்  பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது.  
வெறும் ரூபா 12 இலட்சத்திற்கு Vitz Car ஐ தருவதாக வாக்குறுதி வழங்கவில்லை என ஜேவிபி உளறியதும் பொய் என அம்பலமாகியிருக்கின்றது. 
நாங்களே திவாலடைந்த இலங்கைத்  தீவை அந்த நெருக்கடியிலிருந்து  மீட்டோம் என ஜேவிபி அறிவித்ததும்  பொய் என பகிரங்கமாகியுள்ளது. 
உள்ளுராட்சி நிறுவனங்களின் பொது நிதி முகாமைத்துவம் பற்றிய புரிதலின்றி ஜேவிபிக்கு வாக்களித்தால் மட்டுமே பணம் ஒதுக்கப்படும் என்கின்ற வெற்று அறிவிப்பும் பொய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகிய திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்கின்ற  ஜேவிபியின் அறிவிப்பும் பொய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
'Trump Tariffs' தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக்குப் பின்  அமெரிக்காவுடன் இணைத்து கூட்டறிக்கை (Joint statement)  வெளியிடப்படும் என்கின்ற ஜேவிபியின் அறிவிப்பும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது.  
பட்டாலந்த படுகொலை, பலவந்தமாக தமிழர்களை காணாமலாக்கிய விவகாரங்களில் மாறுபட்ட நிலைப்பாடுகளை  வெளிப்பபடுத்தியதன் மூலம் 'இனவாதம் ஒழிக்கப்பட்டது' என்ற அறிவிப்பு  பொய்யாகியிருக்கின்றது. 
தேசிய பிக்குகள் முன்னணியுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணிவரும் நிலையில் சட்டங்களை வகுத்து இனவாதத்தை ஒழிப்போம் என அறிவித்ததும் வெற்று பொய்  என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் காரணமாகவே தீர்வு கிடைக்கவில்லை என ஜேவிபி அறிவித்தமை பொய் என அம்பலமாகியிருக்கின்றது. 
அரச கடன்களை பெண்களுடன் ஒப்பிட்டு முறிவடைந்த கடன்களை பெண்களின் பொதுவான நடத்தைகளுடன்  ஒப்பிட்டு நியாயம் செய்ய முயன்றமையும் அர்த்தமற்ற மோசமான பொய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
சர்வதேச நாணய நிதியத்தின்  EFF's 4th மதிப்பீடு தொடர்பான அறிவிப்பும் பொய் என உறுதிப்படுத்த பட்டுள்ளது. குறிப்பாக மின்சார கட்டணம் தொடர்பான நிபந்தனைகளை மறைத்தமை அம்பலமாகியுள்ளது.  
தேர்தல் சட்டங்களையும், விதிமுறைகளையும் தாங்கள் ஒரு போதும் மீறவில்லை என்கின்ற அறிவிப்பும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. 
கடந்தகாலங்களைப் போல் நாங்கள் கடத்தவில்லை, முகநூல்களை முடக்கவில்லை, சுகந்திரத்தை தந்திருக்கின்றோம் என ஜேவிபி பேசியதும் பொய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
கேப்பாப்புலவு மீனவ சங்க தலைவர் மீது தாக்குதல் நடத்தவில்லை என அறிவித்ததும் பொய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
சகல காணிகளையும் விடுவிப்போம் என்கின்ற வாக்குறுதியும் வடக்கில் மருதங்கேணி முதல் முள்ளிவாய்க்கால் வரையான நிலத்தை அரச நிலமாக கபளீகரம் செய்ய எடுக்கும் முயற்சிகள் ஊடாக பொய்யாகியிருக்கின்றது. 
இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மறைப்பதற்காக இந்தியா மாறி விட்டதாக ஜேவிபி அறிவித்திருப்பதும் பொய் என அம்பலமாகியிருக்கின்றது 
சர்வதேச நாணய நிதி விவகாரம், எரிபொருள் விலை சூத்திரம், மின்சார கட்டணம் இ வற் வரி மற்றும் விலக்கு விவகாரம், பயங்கரவாத தடை சட்ட விவகாரம்,அரிசி மாஃபியா, சம்பள விவகாரம் உட்பட்ட அடிப்படை விவகாரங்களில் தொடர்ச்சியாக பொய் பேசி வந்த ஜேவிபி உள்ளுராட்சி பிரச்சார மேடைகளையும்  விட்டுவைக்க வில்லை. 
வெறும் சில வாரங்களில் நூற்றுக்கணக்கான பொய்களை கூச்சமில்லாமல் பேசி இருக்கின்றார்கள். 
மந்தமான பொருளாதார வளர்ச்சி, கடன் நெருக்கடி, வறுமை என தலைவிரித்தாடும் நெருக்கடிகளுக்கு பொய்களை பேசி வித்தைகள் காட்டுவதால் தீர்வு  கிடைக்க போவதில்லை.