Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலை,கிளிநொச்சியில் போராட்டம்!

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலையில் போராட்டம்!

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலை -வெருகல் பூநகர் பகுதியில் இன்று  காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது சுலோகங்களை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக வடக்குகிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், மத சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வட கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டாம் நாளாக வெருகல் பிரதேசத்தில் இவ் கவனஈர்ப்பு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமஸ்டி ஆட்சி கோரி 100நாள் போராட்டம்- கிளிநொச்சியில் ஆரம்பம்!

சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100நாள் போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி இன்றையதினம் முதலாவது நாளாக கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுத்தரும் நோக்கில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவானது பல்வேறு மட்டங்களிலும் தனது செயல்பாட்டை முன்னெடுத்துவருகின்றது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் திகதி அடையாளப்படுத்தப்பட்ட 100 நாள் செயல்முனைவு என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்திற்குள் மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வினை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக 2025ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் திகதி (இன்று) தொடக்கம் கார்த்திகை மாதம் 08ஆம் திகதி வரை தொடர்ச்சியான 100 நாட்களும் சுழற்சி முறையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி முதல் நாளான இன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.