Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மறே மற்றும் கியூ தோட்ட மக்களுக்கான நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது!"

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மறே தோட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மறே மற்றும் கியூ தோட்ட மக்களுக்கான நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது!"

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மறே தோட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக 110 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தற்காலிகமாக கடந்த 08ம் திகதி முதல் அங்கிருந்து வெளியேறி நல்லதண்ணீர் தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் தற்காலிகமாக தங்கிவருகின்றனர்.

அதேவேலை, கியூ மேற்பிரிவு தோட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக 122 குடும்பங்களை சேர்ந்த 310 குடும்ப உறுப்பினர்களும் தற்காலிகமாக கடந்த 08ம் திகதி முதல் அங்கிருந்து வெளியேறி சென்.ஜோன் டிலரி தமிழ் வித்தியாலய பாடசாலையிலும்  கியூ கீழ் பிரிவு ஆரம்பப் பிரிவு பாடசாலை கட்டிடத் தொகுதியில் தற்காலிகமாக தங்கிவருகின்றனர்.

மேலும் தற்காலிகமாக வெளியேறி பாடசாலைகளில் தங்கி வருகின்ற மறே, கிவ் தோட்ட  மக்களை நேரில் சென்று நேற்று(09) பார்வையிட்டிருந்தேன்.

இதன்போது, 'மறே மற்றும் கியூ தோட்ட மக்களின்' அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் அனைவருக்கும் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு,
பாடசாலை உடைமைகளை இழந்த மாணவர்களுக்கான அப்பியாச புத்தகங்கள் என்பன வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொன்டுள்ளேன். 

நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பொதுமக்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக இ.தொ.கா பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.கா வின் முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் கோவிந்தன் சென்பகவள்ளி, நோர்வூட் பிரதேச சபை முன்னாள் தலைவர் ரவி குழந்தைவேல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலய உத்தியோகத்தர்கள், இ.தொ.கா உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து செயல்பட்டனர்.

மேலும், கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் வழங்கும் செயற்பாடானது மலையக பிரதேச பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் எதிர்வரும் நாட்களுக்குள் முழுமையாக வழங்கி வைக்கப்படவுள்ளதோடு, உதவி வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதாக ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.