மலையக மக்களை தரக்குறைவாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!
அர்ச்சுனாவுக்கு எதிராக மலையக ஊழியர் சங்கத்தினரால் பசறை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !
மலையக மக்களை தரக்குறைவாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மலையக ஊழியர் சங்கத்தினரால் நேற்று (30) பசறை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
பசறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்து பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான வழியில் நடைபவணியாக பசறை பேருந்து நிலையம் வரை வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பசறை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு அமைதி வழியில் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
மலையக மக்களை இழிவாக பேசிய அர்ஜுனா கைது செய். மலையக மக்களை இழிவாக பேசிய பாராளுமன் ராமநாதன் அர்ச்சனா பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மேலும் பல வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வமைதி வழி எதிர்ப்பு போராட்டத்தில் மலையக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்மணி சிவனேசன், சிவில் அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


