பொலிஸாரை மிரட்ட தன் கழுத்தை அறுத்த பெண் ! அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை.
பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை ஒப்படைப்பேன் - பொறுப்பதிகாரி!
பொலிஸாரை மிரட்ட தன் கழுத்தை அறுத்த பெண்! பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை ஒப்படைப்பேன் அதிரடியாக கூறிய பொறுப்பதிகாரி!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாவடி பகுதியில் வன்முறை கும்பல்களுடன் தொடர்புபட்டு வீடுகளை அடித்து உடைத்தும் செயல்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,
கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட நிலையில் அங்கே வருகை தந்த இளைஞனின் தாயார் பொலிஸாரை மிரட்டி தனது கழுத்தை தானே பிளேட் மூலம் அறுத்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பொலிஸாரை மிரட்டுவதால் எந்தப் பயனும் இல்லை இவ்வாறு கழுத்தை அறுத்து இறந்திருந்தால் பிரேத பரிசோதனையின் பின் சடலம் கணவனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் என்று பொறுப்பதிகாரி சிவானந்தம் நிதர்சன் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


