நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோவை பார்த்துவிட்டு அவரை ஆதரித்து கண்ணீர் மல்க பேசிய சில பெண்களுக்காக...
முசோலினி விவகாரத்தில் கிளாராக்கு மனசு தான் இளகியதாக இருந்ததே தவிர, அவருக்கு மூளையை பயன்படுத்தி சிந்திக்கும் திறன் இல்லை.
நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோவை பார்த்துவிட்டு அவரை ஆதரித்து கண்ணீர் மல்க பேசிய சில பெண்களுக்காக இந்த பதிவு.
உலகிலேயே கொடூரமானவன்,மகா கொலைகாரன் என்றால் நம் நினைவுக்கு உடனே வருவது ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லர் தான். ஆனால்,இந்த ஹிட்லருக்கே குருவாக இருந்த மகா மகா கொலைகாரன்,கொடூரமானவன், பெண் பித்தன் யார் என்றால் அது இத்தாலியை 21 ஆண்டுகள் ஆண்ட கொடுங்கோலன் முசோலினி தான். இவ்வளவு கொடூரமானவனை ஒரு சிறுமி உயிருக்கு உயிராக காதலித்து அவனை கரம் பிடித்தாள் என்றால் நம்ப முடிகிறதா?
ரோம் நகரை சேர்ந்த ஒரு பணக்கார தம்பதிக்கு ஒரே மகளாக பிறந்தவள் தான் கிளாரா பெட்டாசி.
பள்ளி செல்லும் 16 வயது பருவத்திலேயே 49 வயதான முசோலினி மீது தீராத காதல் கொண்டாள்.
இதற்கு காரணம், பொதுவெளியில் முசோலினி ஆற்றிய புரட்சிகரமான உரைகள் தான்.அப்போதே, முசோலினி பல பெண்களுடன் உறவில் உள்ளவர் என்பது கிளாராக்கு தெரியும்.ஆனாலும், அவன் மேல் உள்ள காதலை அவள் விடவில்லை.
வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாறு கூறுகிறார்கள், 'He was a notorious womanizer. He had relationship with hundreds of women' என்கிறார்கள்.
முசோலினியே ஒருமுறை 'I believe power and sex are linked together and I need sex as much as I need food' என அவனே கூறியுள்ளான்.
சோ,இப்படியான ஒரு பொம்பள பொறுக்கி,அயோக்கியன், கொடூரனை தான் கிளாரா உயிருக்கு உயிராக காதலித்தாள்.
கிளாராக்கு 20 வயதானபோது ஒரு முறை காரில் சென்றுக் கொண்டு இருந்தபோது,அவள் கார் முன்னால் முசோலினியின் கார் செல்வதைக் கண்டு உற்சாகம் அடைந்து ஓட்டுனரை அந்த காரை ஓவர் டேக் செய்ய சொல்ல,ஓட்டுனர் அந்த காருக்கு அருகில் சென்றதும் கிளாரா மிகவும் உற்சாகமாக முசோலினியை பார்த்து கை ஆட்டினாள். கிளாராவின் அழகு, இளமை மற்றும் உற்சாகத்தை பார்த்த முசோலினி காரை நிறுத்தி கிளாராவை அழைத்து சிறிது நேரம் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பில் கிளாரா தன்னை ஒரு கடவுளாகவும், உயிர் காதலனாகவும் பார்ப்பதை முசோலினி புரிந்துக் கொண்டான். இந்த சந்திப்பிற்கு பின்னர் கிளாரா அடிக்கடி அவனுக்கு கடிதம் எழுதி வந்தாள்.கிளாராவின் விசுவாசம், காதல், அற்பணிப்பைக் கண்ட முசோலினி அவளை தன்னுடனே வைத்துக் கொள்ள முடிவு செய்தான்.
முசோலினியை சுற்றியிருந்த மற்ற பெண்கள் தங்களது தேவைக்காகவும், அதிகாரத்திற்காகவும் இருக்க கிளாரா மட்டும் உண்மையான காதலுடனும் விசுவாசத்துடனும் இருந்ததால் முசோலினி அவளை மிகவும் நம்பினான்.
இப்படி உறவு சென்றுக்கொண்டுருந்தபோது 1945-ல் இரண்டாம் உலகப் போரின் முடிவில் இத்தாலிய போராளிகள் முசோலினியை கொல்ல துடித்தார்கள்.
இச்சூழலில் கிளாராவை தப்பித்து போக சொன்னான்.ஆனால், கிளாரா 'இறுதி வரை நான் உங்களுடனே இருப்பேன்' என மறுத்து விட்டாள். இறுதியாக போராளிகள் முசோலினியையும் கிளாராவையும் பிடித்து கட்டிப்போட்டனர்.
முசோலினியை கொல்ல மிலன் நகருக்கு இழுத்து சென்றனர். கிளாராவும் உடன் சென்றாள்.
ஓரிடத்தில் முசோலினியை துப்பாக்கியால் சுட்டு கொல்வதற்கு முன் ஒரு போராளி கிளாராவை பார்த்து, 'பெண்ணே,நீ அரசியல் ரீதியாக எங்களுக்கு எந்த குற்றமும் செய்யவில்லை.அதனால் நீ மட்டும் இங்கிருந்து புறப்பட்டு செல்' என்றான்.
இதற்கு கிளாரா,'இவர் இல்லாமல் வாழ்வதை விட இவருடன் இறப்பதையே நான் பாக்கியமாக கருதுகிறேன்.நான் போக மாட்டேன்' என மறுக்கிறாள்.
இப்போது தான் வரலாற்று ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்திய அந்த சம்பவம் நிகழ்ந்தது. போராளி துப்பாக்கியை தூக்கி முசோலினியை நோக்கி சுட்ட கண நேரத்தில் வெகு அருகில் நின்றுக் கொண்டுருந்த கிளாரா புயலாக முசோலினி முன் பாய்ந்து அந்த குண்டை தன் மார்பில் வாங்கிக்கொண்டு கீழே சரிந்து விழுந்து உயிரை விட்டாள்.
கிளாராவின் இச்செயல் புரட்சியாளர்களை திகைக்க வைத்தது. பின்னர்,அவன் முசோலினியையும் சுட்டுக் கொன்றான். இருவரும் இறக்கும்போது முசோலினிக்கு வயது 61. கிளாராவுக்கு வயது 28.
உலகிலேயே கொடூரமான ஒருவனை ஒரு இளம்பெண் இந்தளவிற்கு காதலிக்க முடியுமா?
முடியும்.ஏன்னா, ஒருவர் மீது அசைக்க முடியாத/ஆழமான காதல், அன்பை வைத்த பின்னர் அவருடைய இன்னொரு கொடூரமான பக்கம் தெரிந்தாலும்,உடனடியாக தவிர்ப்பது கடினமானது.ஏன்னா, இது மனசு சம்பந்தப்பட்டது.
ஆனால்,எவ்வளவு தான் ஒருவர் மீது ஆழமான காதலும் அன்பும் வைத்திருந்தாலும் கூட அவர் இந்த சமுதாயத்திற்கு ஆபத்து,கொடூர கொலைகாரன் என தெரியவந்தால், அவர் மீதான காதலையும் அன்பையும் உடனே தவிர்த்து விடலாம். இந்த முடிவு எடுப்பது மூளை சம்பந்தப்பட்டது.
முசோலினி விவகாரத்தில் கிளாராக்கு மனசு தான் இளகியதாக இருந்ததே தவிர, அவருக்கு மூளையை பயன்படுத்தி சிந்திக்கும் திறன் இல்லை.
ஆக, தவெக விஜய் விவகாரத்திலும் இப்போது அழுது கொண்டு வீடியோக்களை வெளியிடும் அத்தனை பெண்களும் மூளை இல்லா கிளாராக்கள் தான்!
முகநூல் பதிவு


