Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மோடியிடம் முறையிடவுள்ள தமிழரசுக் கட்சி!

.

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது தமிழரசு கட்சியினர் அவரை சந்தித்து, இங்குள்ள மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.    

யாழ்ப்பாணத்தில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5,6 ஆம் திகதியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது இலங்கை தமிழரசு கட்சியினர் அவரை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது.

அந்த சந்திப்பிலே முக்கியமாக இப்போதிருக்கக்கூடிய எங்களுடைய மாகாண சபை முறைமை தொடர்பாக அதில் இருக்கும் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டுவருவது தொடர்பாகவும் அதனுடன் இணைந்த பல விடயங்கள் தொடர்பாகவும் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்.

அதேவேளை எங்களுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு தேசிய ரீதியான தீர்வுக்கான முன்மொழிவை பிரதமர் மோடி அவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தை மோடிக்கு தெரிவிப்போம் என தெரிவித்தார்.