Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

செம்மணியில் இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம்

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இதனைத் தெரிவித்தார். 
அவர் மேலும் கூறுகையில், 

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் ஒன்பதாம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டன. 

முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வுகளின் போது இதுவரை 42 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 
சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்டு, புதிதாக அகழப்பட்ட பகுதியில் ஒரு சிறுமியின் ஆடை ஒன்றும் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

செம்மணியில் இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு