Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழினப் படுகொலை நடந்துள்ளது என்பதற்கு செம்மணி அத்தாட்சி!

தாயின் கருவிலேயே தமிழர்களின் கரு அறுக்கப்பட்டுள்ளது!

தாயின் கருவிலேயே தமிழர்களின் கரு அறுக்கப்பட்டுள்ளது. தமிழினப் படுகொலை நடந்துள்ளது என்பதற்கு செம்மணி அத்தாட்சி என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய (24) நாடாளுமன்ற அமர்வில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

குழந்தைகள், சிறார்கள், முதியவர்கள் என பலரும் புதைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தாயின் கருவிலேயே தமிழர்களின் கருவைக்கூட அறுத்துள்ளனர். தமிழினப் படுகொலை நடந்துள்ளது என்பதற்கு இது அத்தாட்சியாகும்.

எனவே சர்வதேச நியதிகளின் அடிப்படையில் சர்வதேச நாடுகள் மற்றும் நீதிமன்றங்களின் ஒத்துழைப்புடனேயே அகழ்வாய்வு நடவடிக்கை இடம்பெறவேண்டும். ஏனெனில் உள்ளக பொறிமுறையென்பது தோல்வி அடைந்துள்ளது.

கடந்த காலங்களில் உள்ளக பொறிமுறை ஊடாக போலியான தகவல்களே வெளியிடப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக பொறிமுறைமீது நம்பிக்கை இல்லை.

வடக்கு, கிழக்கில் எங்கு தோண்டினாலும் தமிழர்கள் திட்டமிட்ட அடிப்படையில் அழிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. எனவே, தமிழினப் படுகொலை தொடர்பிலும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்- எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.