Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

கணினி குற்றங்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 198 வெளிநாட்டவர்கள் கைது!

கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

"இந்தியர்கள் 174 பேர் கைது.''தென் மாகாணத்தின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, கணினி குற்றங்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 198 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிதிகம, ஹிக்கடுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மொத்த 198 பேரில் இனங்காணப்பட்டவர்கள்: இந்தியர்கள்: 174 பேர், நேபாளிகள்: 25 பேர், 
நேற்று (11) இரவு மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிங்வத்த பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் மிதிகம பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது 33 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 28 இந்தியர்களும், 5 நேபாளிகளும் அடங்குவர். இவர்கள் அனைவரும் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பின்வரும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன: 
விசா இன்றி நாட்டில் தங்கியிருந்தமை. சுற்றுலா விசாவில் வருகை தந்து சட்டவிரோதமாக தொழில் செய்தமை. தீர்வையற்ற சிகரெட்டுகளை கைவசம் வைத்திருந்தமை. 

கணினி குற்றங்கள் சட்டத்தின் கீழ் வரும் மோசடிகளில் ஈடுபட்டமை.
இதேவேளை, ஹிக்கடுவை பகுதியில் 35 இந்தியர்களும் 20 நேபாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காலி பகுதியில் மேலும் 110 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.