Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இழுவைமடித் தொழிலைத் தாங்கள் கைவிடுவதாக இந்திய மீனவர் பிரதிநிதிகள் தெரிவிப்பு!

,

இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் இந்திய மீனவர் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில்,

இலங்கைக்கு வந்துள்ள இந்திய மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மீனவர் பிரச்சினை தொடர்பில் என்னைச் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.

இந்தச் சந்திப்பில் இழுவைமடித் தொழிலைத் தாங்கள் கைவிடுவதாக எம்மிடம் கூறியிருக்கின்றார்கள். இது அவர்கள் எமக்குக் காட்டிய நல்லெண்ண சமிக்ஞையாக நாங்கள் பார்க்கின்றோம்.

அதற்கான நடைமுறைச் செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு ஆராய்ந்துள்ளனர். அவர்கள் இழுவைமடித் தொழிலைக் கைவிட்டால் அவர்களுக்கான மாற்றுத் தொழில் ஏற்பாடுகளை அந்த நாட்டு அரசு செய்ய வேண்டும்.

குறிப்பாக இந்த இழுவைமடித் தொழிலாளர்கள் அந்த நாட்டு அரசிடம் கடலட்டைப் பண்ணை வைப்பதற்கு அனுமதி கேட்டுள்ளனர். உண்மையில் அவர்களது இந்த மாற்று முயற்சி நியாயமானது.

அவர்கள் சொல்வது போன்று இழுவைமடித் தொழிலை அவர்களாகவே நிறுத்தத் தீர்மானித்துள்ளமை நல்ல விடயம் என்றார்.