Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

4 பில்லியன் டொலருக்காக சீனா பறக்கின்றார் அநுர Share

,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீண்டும் சீனாவுக்குச் செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா சீனா சென்று நாடு திரும்பியுள்ளார். அமைச்சர் வசந்த சமரசிங்க தற்போது சீனாவில் தங்கியுள்ளார். சீனா சென்ற ரில்வின் சில்வா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீண்டும் சீனா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் திரும்பியுள்ளார் என்று அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. அண்மையில் சீனா சென்று திரும்பிய ஜனாதிபதி மீண்டும் சீனா செல்லவுள்ளமை பேசுபொருளாகியிருக்கின்றது.

கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, பொருளாதார நெருக்கடி சமயத்தில் 4 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க சீனா உறுதியளித்திருந்தது. ஆயினும் கோத்தாபய அதைத் தவிர்த்து சர்வதேச நாணயநிதியத்திடம் செல்வதற்கு முடிவெடுத்தார். அதனால் அந்த நிதி வழங்கப்பட வில்லை. அவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த 4 பில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே அநுர சீனா செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.