Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

போப் பிரான்சிஸ் மறைவு: வத்திக்கானின் தற்காலிக தலைவர் நியமனம்..!

,

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

போப் பிரான்சிஸ் நேற்றையதினம் வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். 

மறைவின் போது அவருக்கு வயது 88.

நேற்றையதினம், உள்ளூர் நேரப்படி காலை 07:35 மணிக்கு அவர் இறந்ததை வாடிகன் உறுதிப்படுத்தியது. போப் பிரான்சிஸ் பக்கவாதத்தாலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இதய செயலிழப்பு காரணமாகவும் உயிரிழந்தார் என்றும் வாடிகன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போப் பிரான்சிஸ் மறைவையடுத்து புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வரை வத்திக்கானின் இடைக்கால தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் பணியாற்றுவார் என்று திருச்சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அயர்லாந்தில் பிறந்த ஃபாரெல், அமெரிக்காவில் நீண்ட உறவுகளைக் கொண்டுள்ளார். வத்திக்கானின் கூற்றுப்படி, டல்லாஸ் மறைமாவட்டத்தின் பிஷப்பாகவும், வாஷிங்டன் டிசி மறைமாவட்டத்தின் துணை பிஷப்பாகவும் கெவின் ஃபாரல் பணியாற்றியுள்ளார்.

இதேவேளை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு உலக நாடுகள் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.