Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

மட்டக்களப்பில் குளக்கரையில் குழி தோண்டி விளையாடிய சிறுவர்கள் மூவர் :குளத்தில் மூழ்கிப் பலி!

,

மட்டக்களப்பு வாகரை கருவப்பன்சேனை குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ள துயரச்சம்வம் இடம்பெற்றுள்ளது

உறவினர்களுடன் மீன் பிடிக்கச் சென்றவேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

பனிச்சங்கேணியைச் சேர்ந்த 12 வயதுடைய க.சானுஜன் மற்றும் 10 வயதுடைய க.டிக்ஷன் ஜெ.ருக்ஷானா ஆகிய மூன்று சிறுவர்கயே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் பணிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களாவார்

மூவரும் குளத்தின் கரையோரத்தில் குழி தோண்டி விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் காணப்பட்ட பாரிய குழியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கோடை காலமானதால் குளத்தில் நீர் மட்டம் குறைந்து காணப்படுவதோடு இக்காலங்களில் குளத்தில் மீன் மீடித் தொழில் ஈடுபடுபவர்கள் சிலர் தங்களது குடும்பத்துடன் பகுதிக்கு சென்று தங்கி நின்று இரவு பகலாக மீன் பிடித் தொழில் ஈடுபட்டு வருவது வழக்கமாகும்.

இவ்வாறான நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரழந்தவர்களின் சடலம் உடற்கூற்றாய்விற்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாரலக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

வாகரை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.