ட்ரம்பின் வெனிசியுலா மீதான படையெடுப்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!
அமெரிக்க இராணுவத் தாக்குதலையும் நிக்கோலஸ் மதுரோ கடத்தலையும் கண்டித்து லங்கா சமசமாஜக் கட்சியின் மத்திய குழுவும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காகவா? அல்லது மாறாக அந்த நாட்டின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றி டாலரின் மதிப்பைப் பாதுகாக்கவா?
வெனிசியுலா மீது அமெரிக்கா நடத்திய அறிவிக்கப்படாத இராணுவத் தாக்குதலின் விளைவாக, நாட்டின் ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி கடத்தப்பட்டதைக் கண்டித்து இந்திய தொழிற்சங்க ஆர்வலர்கள் ஒரு பெரிய போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற தொழிற்சங்க ஆர்வலர்கள், வெனிசியுலா மக்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் விசாகப்பட்டினத்தில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் உள்ள ராமகிருஷ்ணா கடற்கரையில் 1,500ற்கும் மேற்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் கூடி, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் முதல் பெண்மணி சிலியா புளோரஸை அமெரிக்கா கடத்தியதைக் கடுமையாகக் கண்டித்து, வெனசியுலா மக்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
இந்திய தொழிற்சங்க மையத்தின் 18ஆவது அகில இந்திய மாநாட்டின் நான்காவது நாளில், அமெரிக்க ஏகாதிபத்திய படையெடுப்பு மற்றும் வெனிசியுலா மீதான குண்டுவீச்சைக் கடுமையாகக் கண்டிக்கும் ஒரு தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வெனிசியுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும் எனவும் இந்த ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் அழைப்பு விடுக்கிறது.
இலங்கையின் பதில்
வெனிசியுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல்களையும், அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கடத்தியதையும், இலங்கையில் தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கண்டித்துள்ளது.
அந்த கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"வெனிசியுலாவின் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசை ஆக்கிரமித்து அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கடத்திச் சென்ற வெனிசியுலாவுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இராணுவத் தலையீட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.."
உலகின் எந்தவொரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட அரசையும் போலவே, வெனிசியுலா மக்களுக்கும் அவர்களின் எதிர்காலத்தையும் அவர்களை யார் ஆளுவார்கள் என்பதையும் தீர்மானிக்கும் இறையாண்மை உரிமை உள்ளது எனவும், அதை மீற எந்த சக்திக்கும் உரிமை இல்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெனிசியுலா மீது அமெரிக்கா நடத்திய இந்த இராணுவப் படையெடுப்பைக் கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணி, வெனிசியுலாவின் இறையாண்மை இருப்பு மற்றும் சுதந்திரத்திற்காக நிற்பதாக அந்த ஊடக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத் தாக்குதலையும் நிக்கோலஸ் மதுரோ கடத்தலையும் கண்டித்து லங்கா சமசமாஜக் கட்சியின் மத்திய குழுவும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ட்ரம்பின் வெனிசியுலா மீதான படையெடுப்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு

வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காகவா?
அல்லது மாறாக அந்த நாட்டின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றி டாலரின் மதிப்பைப் பாதுகாக்கவா?
சர்வதேச விதிமுறைகளை மீறி, போர்ப் பிரகடனம் இன்றி (அனைத்து பன்னாட்டு விதிகளுக்கும் புறம்பாக) வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டை மறைமுகமாகக் கைப்பற்றியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஃபுளோரஸைக் கைது செய்து அமெரிக்காவுக்குக் கொண்டு வந்து புரூக்ளின் சிறையில் அடைத்துள்ளார். அமெரிக்க நீதிமன்றம் விசாரித்துத் தண்டனை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே டிரம்ப்தான், உலகில் எட்டே கால் போர்களை (கால் பங்கு போர் - தாய்லாந்து - கம்போடியா போர்) நிறுத்தி அமைதியை நிலைநாட்டியதற்காகத் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு வருகிறார். தைவான் மீதான சீனாவின் படையெடுப்பு முயற்சிக்கும் பகிரங்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
வெனிசுவேலா மீதான டிரம்ப்பின் முக்கிய குற்றச்சாட்டுகள்:
1. வெனிசுவேலாவின் பொருளாதார சரிவு, அரசியல் அடக்குமுறை காரணமாக அந்நாட்டில் இருந்து இதுவரை 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மற்றும் குற்றவாளிகள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர்.
2. வெனிசுவேலாவில் இருந்து கடத்தி வரப்படும் கொகைன் போதைப் பொருள்களால் அமெரிக்க இளைஞர்கள் சீரழிகின்றனர்.
3. அமெரிக்காவால் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ள ட்ரென் டி அரகுவா மற்றும் கார்டெல் டி லாஸ் சோல்ஸ் ஆகிய குற்ற அமைப்புகளுக்கு மதுரோ தலைமை தாங்கி வழிநடத்துகிறார்.
இந்த மூன்று குற்றச்சாட்டுகளில் வெனிசுவேலாவில் இருந்து லத்தீன் அமெரிக்கா பகுதிகளுக்கு அந்நாட்டு மக்கள் சட்டவிரோதமாக குடியேறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை மட்டுமே உண்மை எனக் கொள்ளலாம். ஆனால், இதற்கும் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையின் தோல்வியே காரணம்.
மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் கிடையாது. அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ள வெனிசுவேலா வகை கொக்கைன் ஒரு சதவீதத்துக்கும் குறைவு என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த குற்றச்சாட்டுகளெல்லாம் வெறும் கண்துடைப்புக் காரணங்கள் என்பது மதுரோவின் கைதுக்கு பிந்தைய டிரம்ப்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிச்சமாகியுள்ளது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசுகையில், “வெனிசுவேலாவின் எண்ணெய் வணிகம் நீண்ட காலமாக முற்றிலுமாக சரிந்துள்ளது அனைவரும் அறிந்ததே. எடுக்க முடிந்த எண்ணெய் அளவை ஒப்பிடுகையில், மிகக் குறைவான எண்ணெய் மட்டுமே எடுக்கப்பட்டு வருகின்றது. மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களை வெனிசுவேலாவுக்கு அனுப்ப உள்ளோம். அவர்கள் பல லட்சம் டாலர்களை அங்கு முதலீடு செய்து, சேதமடைந்த எண்ணெய் நிறுவனங்களை சீரமைப்பார்கள். அதன் மூலம் அந்நாட்டுக்கு வருமானம் ஈட்டத் தொடங்குவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “வெனிசுலாவில் புதிய ஆட்சி அமையும்வரை அமெரிக்கா நிர்வாகம் செய்யும். இனி யாா் ஆட்சி செய்யப் போகிறாா்கள் என்பதில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடும். மதுரோ விட்டுச்சென்ற அதே பாணியில் மற்றொருவா் ஆட்சியைப் பிடித்து நாட்டை வழிநடத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதில் எந்தவிதமான சமரசமும் செய்ய நாங்கள் தயாராக இல்லை” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முறையான போர்ப் பிரகடனம் அறிவிக்காமல் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் அதிகாலை 2 மணிக்கு ஒரு நாட்டின் மீது படையெடுத்தது பற்றிப் பெருமையுடன் விளக்கம் அளித்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள், “அமெரிக்காவின் முப்படைகளும், அனைத்துப் புலனாய்வு அமைப்புகளும் இணைந்து மேற்கொண்ட வெனிசுவேலா மீதான நடவடிக்கை 30 நிமிடங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. என்றும், 150 அதிநவீன போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டன என்றும், வெனிசுலாவிற்க்குள் நுழைந்து அங்கிருந்த மதுரோவையும், அவரது மனைவியையும் அமெரிக்க வீரர்கள் கைது செய்தனர்” என்று பெருமை பேசுகின்றனர்.