Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

கட்டார் நோக்கி பயணித்த சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் அபுதாபியில் தரையிறக்கப்பட்டுள்ளது !

மத்திய கிழக்கல் அமைதி திரும்ப இரு நாடுகளும் பூரண போர் நிறுத்தத்தை ஏற்றுகொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவிப்பு.

ஈரான் -இஸ்ரேல் சண்டையால் மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில் பிராந்தியத்தை அண்மித்து பயணிக்கும் அனைத்து இலங்கையர்கள் தொடர்பிலும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக, தேவைப்பட்டால் தூதரக அலுவலகங்கள் ஊடாக இணைந்து தலையீடு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என  வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீது ஈரான் தாக்குதல்....!  அல் உதெய்த் விமானத் தளம் மீது ஈரான்  ஏவுகணைகளை ஏவியுள்ளதுடன்  வெற்றிகரமாக தாக்குதலை நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை   உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டார் தலைநகர் டோஹாவின் தென்மேற்கே அமைந்துள்ள 24 ஹெக்டேர் (60 ஏக்கர்) இல் அல் உதெய்த் விமானத் தளமானது அமெரிக்க மத்திய கட்டளையின் முன்னோக்கிய தலைமையகமாகும்.  1996 ஆம் ஆண்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் நிறுவப்பட்ட இது, மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க தளமாகும்,

ஈரான்,  கட்டார் தலைநகர் டோஹாவில் உள்ள அமெரிக்காவின் அல்-உதெய்  விமானத் தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியமைக்கு கத்தார் வெளியுறவு அமைச்சக ஊடகத் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, கண்டித்துள்ளதுடன் இது கட்டாரின் இறையாண்மை மற்றும் ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.  கட்டார் வான் பாதுகாப்பு மூலம் தாக்குதலை முறியடித்து ஈரானிய ஏவுகணைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டதாக அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்காவும் இங்கிலாந்தும் கட்டாரில் உள்ள தங்கள்  குடிமக்களை மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது. கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது.கட்டார் தாக்குதலை அடுத்து பஹ்ரைன் மற்றும் குவைத் நாட்டின் வான் பரப்புக்களும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கட்டார் நோக்கி பயணித்த சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் அபுதாபியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட்  டிரம்ப் அறிவிப்பு. இதேவளை அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்த திட்டத்தை ஈரான் ஏற்றுக்கொண்டதாக ஈரானிய மூத்த அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள், மத்திய கிழக்கல் அமைதி திரும்ப இரு நாடுகளும் பூரண போர் நிறுத்தத்தை ஏற்றுகொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவிப்பு.

இதில் உண்மை இல்லை என ஈரான் தெரிவிப்பு.