Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அம்பாறையில் மீண்டும் எரிபொருள் வரிசை ஆரம்பம்!

எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு மீள வாகன வரிசையை ஏற்படுத்தியுள்ளனர் என மக்கள் குற்றச்சாட்டு

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக   எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் மாலை முதல் காலை வரை  நீண்ட வாகன வரிசை காணப்படுகின்றது.
சில பகுதிகளில் நேற்று இரவு   மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  இரவு நீண்ட வரிசைகள் காணப்பட்டன. தற்போது எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

எனினும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு மீள வாகன வரிசையை ஏற்படுத்தியுள்ளனர் என மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சிலர் செயற்கை  தட்டுப்பாட்டை  ஏற்பட்டுத்தி  மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும்  சில  எரிபொருள் நிலையங்களில்  தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது. இது தவிர   எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என்பதற்காக ஒரு சில எரிபொருள் நிலையங்களில் இவ்வாறு  வரிசைகள் உருவாகியுள்ளதாக குறிப்பிடபப்டுகின்றது.

- பாறுக் ஷிஹான்