Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தென்னைமரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

தெளிகருவிகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமை நேற்றைய தினம் (27)  அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் கலாநிதி சுனிமல் ஜெயக்கொடி அவர்கள் விசேடமாக கலந்து கொண்டு கருத்துதெரிவிக்கையில், தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கம் தொடர்பான பிரச்சினை ஒரு தேசிய பிரச்சினையாக உள்ளதாகவும் கிருமிநாசினி கொல்லிகளை பயன்படுத்தி இப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளதாகவும், எனவே இப் பிரச்சினைக்கு தெளிகருவிகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இத் திட்டத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் இரு வாரங்களுக்கு யாழ் மாவட்டத்தில் வெள்ளை ஈ தாக்க ம் அதிகமாக இனங்காணப்பட்ட சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் கூடியளவிலான அதிக வலுவுள்ள தெளிகருவிகள் மூலமாக தென்னை மரங்களை கழுவும் செயற்பாட்டை வினைத்திறனாக முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இப் பாரிய செயற்பாட்டை முன்னெடுக்க அனைத்து சமூகங்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த, அரசாங்க அதிபர் அவர்கள், இவ் வெள்ளை ஈ தாக்கம் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகவும், வெள்ளை ஈ தாக்கம் அதிகமாக இனங்காணப்பட்ட சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் - முதற்கட்டமாக சாவகச்சேரி மற்றும் கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இடங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக தென்னை பயிர்ச் செய்கை சபையின் ஒத்துழைப்புடன் குறைந்தளவிலான தெளிகருவிகள் மூலமாக தென்னை மரங்களை சுத்தப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மற்றைய பத்து பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இத் தாக்கம் தொடர்பான நிலமைகள் தொடர்பாக வும், தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் எதிர் வரும் 14 ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்படவுள்ள கட்டுப்படுத்தல் செயற்பாட்டிற்கு தேவையான ஆளணி மற்றும் இதர தேவைகள் தொடர்பான உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடி விரைவான விபரங்களைஇரு வாரங்களுக்குள் அறிவிப்பதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.மேலும், தென்னை மரங்களை வெள்ளை ஈ தாக்கத்திலிருந்து பாதுகாக்க உரிய செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ள தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு தமது நன்றியினையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் பிரதி பொதுமுகாமையாளர் திரு. என்.எஸ் .ஜெயலத், உதவிப் பொது மேலாளர் திரு. தே.வைகுந்தன், பிராந்திய முகாமையாளர் திரு ஈ.சற்குணன், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், சாவகச்சேரி பிதேச செயலாளர்,கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண உதவிப் பிரதேச செயலாளர்கள், நல்லூர் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்,