ஊர்மனையை அண்மித்த இராமர் பாலத்தின் மணல் திட்டுகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வாய்ப்பு!
,

லைமன்னார் - ஊர்மனை பகுதியை அண்மித்துள்ள இராமர் பாலத்தின் 6 மணல் திட்டுகளை எதிர்வரும் மே மாதம் 15 திகதி முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சுற்றலாப் பணியகத்தின் தலைவர், மன்னார் மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர், பிரதேச செயலாளர், கடற்படையினர், கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இராமர் பாலத்தினை பார்வையிடுவதற்கான படகுப் போக்குவரத்தினை ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகு மற்றும் அது தொடர்பிலான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் முன்னதாகவே பாதுகாப்பு அமைச்சு அனுமதியினை வழங்கியிருந்தது.
எனினும், அது நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடி, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாகச் சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணங்களை நிர்ணயிப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.