Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ரெலோவுக்கு அழைப்பு விடுத்த - தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்

.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) கலந்துரையாடலுக்கு வருமாறு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்  நாடாளுமன்ற அமர்வுகள் இடம் பெறுவதால் தான் கொழும்பில் நிற்பதாகவும் குறித்த திகதி ஒன்றில் கலந்துரையாடலை நடத்தலாம் எனவும் பதில் வழங்கியுள்ளார்.

இந்த கலந்துரையாடலானது இவ்வார இறுதியில் இடம்பெற உள்ள நிலையில் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் கட்சிகளும் இணைந்து கலந்துரையாடலை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.