Breaking News
தாய்வான் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவத்தில் 4 பேர் பலி
,

தாய்வானில் தைசங் நகரிலுள்ள வணிக வளாகத்தில் 12-வது மாடியில் வாயு வெடிப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, 20 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 2 பேர் சீனாவின் நிர்வாகத்திற்கு உட்பட்ட மக்காவ் பகுதியில் இருந்து வந்துள்ளனர்.
ஒரு குடும்பத்திலுள்ள 7 பேர் சுற்றுலாவுக்காக வந்த இடத்தில் இவர்கள் பலியாகி உள்ளனர். இதனை மக்காவ் சுற்றுலா அலுவலகம் இன்று உறுதி செய்துள்ளது.
இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் இன்று காலை 11.30 மணியளவில் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர்.
வெடிப்பு சம்பவம் குறித்து குறித்து விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் அதிகாரிகளுக்கும் அதிபர் லாய் சிங்-தே உத்தரவிட்டு உள்ளார்.