Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வடக்கு கிழக்கில் 92,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்.

யார் குற்றம்? யார் பெறுப்பெடுப்பது?

வடக்கு கிழக்கில் 92,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன இவர்களுக்கு நிலையான வருமான வழிமுறைகள் இல்லை, இதனால் இக்குடும்பங்களில் உள்ள பிள்ளைகளது எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது. எனவே பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருவாய் பெறக்கூடிய சுய தொழில்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். என தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட எம்.பி. கே.எஸ்.குகதாசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் விரிவாக்கமானது, ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் நம்பிக்கைக்குரிய ஒரு படியாகும். பொருளாதார மாற்றச் சட்டத் திருத்தம், அரச-தனியார் கூட்டுச் சட்ட அறிமுகம் முதலியன வணிக நம்பிக்கை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளன. எனினும், இந்த ஒப்பந்தங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படும் அல்லது எந்தக் குறிப்பிட்ட தொழில்கள் பயனடையும் என்பது பற்றிய தெளிவான வரைபடத்தை அரசு வழங்கவில்லை என்றார்.

அண்ணளவாக வடக்கு,கிழக்கில் ஒரு லட்சம் பெண்கள்... தமது குடும்ப பொறுப்பை சுமக்கின்றார்கள். இது எமது இனத்திற்கு மிக அதிகம்.  தமிழ் அரசியல் கட்சிகள் காலம் தாழ்த்திய விழிப்புணர்வு, இது கிட்டதட்ட ஒரு சந்ததி கல்வி, போசாக்கின்மை என்பவற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு விட்டது. குறைகூறுவது நோக்கமில்லை அரசியல்வாதிகள் தம்மை பற்றி மட்டும் சிந்திக்காமல் சிறியளவிலாவது மக்களை பற்றியும் சிந்திக்கவேண்டும்.