Breaking News
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எந்தவித நடவடிக்கையும் இல்லை!
,

தமிழ் மக்கள் விடயத்தில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உணர்வுப் பூர்வமாக கருத்துக்களை தெரிவிக்கும் போதிலும் உரிய தீர்வுகளை முன்வைக்கவில்லை என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது தங்களது உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறும் ஜனாதிபதி, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில் கருத்துரைப்பதில்லை என தெரிவித்தார்.