பேச்சு பல்லாக்கு! தம்பி பொடிநடை!! ஊடகங்கள் உடாக அரசை நகர்த்தும் NPP ஆட்சியாளார்கள்.
ஆட்சி ஆறுமாதம் கடந்துவிட்டது. இவ் ஆட்சியாளார்கள் தமிழ்மக்களுக்கு ஆற்றிய சேவை என்ன.....?

பேச்சு பல்லாக்கு தம்பி பொடிநடை என்ற. பழமொழிக்கு ஏற்ப ஊடகங்கள் உடாக அரசை தகர்த்தும் NPP ஆட்சியாளார்கள்.
ஆட்சிக்கு ஆறுமாதம் கடந்துவிட்டது. இவ் ஆட்சியாளார்கள் தமிழ்மக்களுக்கு ஆற்றிய சேவை என்ன.....? ஐந்நூறு கோடி ரூபா அபிவிருத்தி நிதி அதை கடந்து ஆற்றிய சேவை என்ன....? வலிவடக்கிலோ கோப்பாப்பிலவிலோ இதர ஆக்கிரமிப்பு இடத்திலிருந்தோ காணிகள் விடுவிக்கப்பட்டதா......?
நல்லாட்சி காலத்தில் நடந்ததை போல் வேகமாக ஏதாவது காணி விடுவிப்போ அபிவிருத்தியோ நடக்கிறதா.....? எத்தனை அரசியல் கைதிகள் விடுதலையானர்கள்
அரசியல் கைதி என யாருமில்லையாம்.
குற்றத்திற்கான தண்டனை குற்றவாளிகளே உள்ளனராம். வடக்கு தெற்கு என்ற பேதம் எதுவும் இல்லையாம் ஆனால அடாத்தாக பௌத்த விகாரைகள் அமைக்கலாம் அதற்கு சட்டவிதிவிலக்கு உண்டு...!
தெற்கில் கிடைக்கும் நீதியை வடக்கில் உள்ளோர் பெறமுடியாது. ஏனேனில் நீங்கள் தமிழர்கள் நாம் பௌத்த சிங்கள மக்கள் எமக்கிருக்கும் அரசியல் உரிமைகளை நீங்கள் பெறமுடியாது ஏன்...? பௌத்தத்துக்கு முதலிடம் NPP துஏP நாம் இருவர் ஒருவர். எம்மிடம் உள்ள இனவாத சாயத்தை மறைக்கவே கஜமுக சூரனாக NPP அவதாரம் எடுத்தோம்.
இனி என்ன நடக்க போகிறது.....? தமிழர்களே தங்களை தாங்களே அழித்து கொண்டனர் என்ற முத்திரையை பதிக்க பிள்ளையான் கருணா டக்ளஸ் போன்றோர் கைது செய்து ஆட்சியாளர் தம்மை புனிதப்படுத்துவர் அவர்களை ஏவியவர்கள் யார் .....? அந்த. அதிகாரத்தை வழங்கிய நபர்கள் யார்....? ஒரு போதும் அவர்கள் கைதாகமாட்டார்கள் ஏனேனில் அவர்கள் விடுதலை புலிகளை அழித்த பேரன்புக்குரியவர்கள்.
இவர்கள் பௌத்தர்கள் அவர்கள் மேல் சட்டம் பாயாது....! இதுவே இலங்கை தீவின் மிகப்பெரும் சாபம் இச்சாபம் அகலா வராக்கும் இந்த அழகான தேசத்துக்கு விடிவே இல்லை. தமிழனை ஒடுக்க இந்த இலங்கை தாயை அந்நிய தேசத் தலைவர்களுக்கு விலை மாதராக்கி விருந்து வைப்பார்கள். இவர்களுக்கு வாக்கு பொறுக்க ஒரு ஜனநாயக வழியில் ஒரு படித்த கூட்டம் வேறு தமிழர்களின் கோடாரிகாம்புகள் இவர்கள்.
நான்கு தசாப்தமாக ஆயுதவழியில் போராடி மரணித்தவர்களின் கல்லறை கூட இந்த மடையர்களை எண்ணி கண்ணீர் விடும் இவ்வாறான கேவலமான இனத்துக்கா எமது உயிரை இ ழந்தோம் என......! அட அறிவு கெட்ட ஜென்மங்களே தென்னிலங்கை கட்சிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் சர்வதேச நெருக்குதலில் இருந்து போர்குற்றவாளிகளை காப்பாற்றும் எம் இனம் முழுமையாக. சுயத்தை இழக்கும்.
அன்பான தமிழ் சொந்தங்க ளே எமது வாக்குகள் அனைத்தும் தமிழ் தேசியத்தை நாடிநிக்கும் கட்சிகளுக்கே வழங்குங்கள்.
தர்மம் ஒரு நாள் வென்றேயாகும்.