மஹிந்தவின் உடல் நிலை! நாமல் வௌியிட்ட தகவல்! - மட்டக்களப்பில் மகன் தாக்கி தாய் மரணம்!
பலதும் பத்தும். 07,04,2025 - யாசகம் பெறுபவர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடிநடவடிக்கை!

மஹிந்தவின் உடல் நிலை! நாமல் வௌியிட்ட தகவல்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அவரது மகன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்முன்னிலையான போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவிவந்தன. இது குறித்து கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, "சமூக ஊடகங்களில் என்னபேசப்பட்டாலும், நான் வீட்டிற்குச் சென்றபோது தந்தை நலமுடன் இருந்தார்" என்றார்.
போராட்டத்தில் குதித்த கிளிநொச்சி நீர்ப்பாசனதிணைக்கள உத்தியோகத்தர்கள்!
கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்று கவனயீர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர்ஒருவர், கடந்த 03ம் திகதி யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உயிரிழப்புக்கு குறித்த பிரிவின் பொறியியலாளர் தான் காரணம் என தெரிவித்துசில சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன. குறித்த செய்திகள் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்தே குறித்த கவனயீர்ப்புபோராட்டம் இடம்பெற்றது. இது திணைக்களத்தை அவமதிக்கும் செயல் என தெரிவித்து உத்தியோகத்தர்கள்நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புத்தாண்டு காலத்தில் நியாயமான விலையில் Frozen Fish பொதிகள்!
தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் புதிய மீன்களை நியாயமான விலையில் விற்பனைசெய்யும் புதிய திட்டத்தை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 300 மற்றும் 400 கிராம் Frozen Fish பொதிகள் நியாயமான விலையில்விநியோகிக்கப்படவுள்ளன. தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய மீன் தட்டுப்பாட்டை குறைப்பதற்கும்விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகஇலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.ஏ.கே.மார்க் தெரிவித்துள்ளார். ஆரம்பகட்டமாக இந்த திட்டமானது, தெரிவு செய்யப்பட்ட 21 சதொச விற்பனைநிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தபால் வாக்குச் சீட்டுகள் தயார் நிலையில்
114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளைஇன்று (07) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல்ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற நடைமுறைக்குப் பிறகு, ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகளைவிநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்ஆர்.எம்.எல்.ஏ ரத்னாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குச்சீட்டுகள்அடங்கிய பொதிகளைப் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில்இருப்பதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார குறிப்பிட்டார்.
தொடர்புடைய தபால் சீட்டு விநியோக நடவடிக்கைகள் இன்று பிற்பகல் அல்லது நாளை (08) ஆரம்பமாகும் என அவர் 'அத தெரண' விடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகள் அச்சிடும்பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த தபால் வாக்குச் சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகஅரச அச்சக அதிகாரி பிரதீப் புஷ்பகுமார தெரிவித்தார்.
பேருந்துகளுக்கு உணவு வழங்கும்உணவகங்களை ஒழுங்குபடுத்த கோரிக்கை!
நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதிகளை வழங்கும் உணவகங்களின்தரம் குறித்து சுகாதாரப் பிரிவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று பேருந்து சங்கம்கேட்டுக்கொண்டுள்ளது.
சம்பந்தப்பட்ட உணவகங்களில் உள்ள உணவுகள் சுகாதாரமான முறையில் காணப்படுவதில்லைஎனவும், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் தரமற்ற முறையில் பராமரிக்கப்படுவதாகவும்முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மத்திய வங்கியின் அறிக்கைஜனாதிபதியிடம் கையளிப்பு!
வரலாற்றில் நாட்டின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு இலங்கையின்பொருளாதார மீட்சியில் நிலையான முன்னேற்றத்தை எடுத்துக்காட்டி இலங்கை மத்திய வங்கிஅதன் முதன்மை வெளியீடான வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வு அறிக்கை 2024 (AER 2024) ஐ ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் அநுர குமார திசாநாயக்கவிடம்கையளிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க இன்று (07) ஜனாதிபதி செயலகத்தில்வைத்து ஜனாதிபதியிடம் இந்த அறிக்கையை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
மட்டக்களப்பில் மகன் தாக்கி தாய் மரணம்!
வீட்டு வளாகத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 72 வயது நாவலடி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகனுடன் ஏற்பட்ட தகராறு அதிகரித்ததைத் தொடர்ந்து மகன் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் எனகாவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உடைந்த துடைப்பம் மற்றும் தடி ஆகியவைகாவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தக் கொலையுடன் தொடர்புடைய 42 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக்கூறப்படுகிறது. மேலும், வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சாமர சம்பத் தசநாயக்கஎம்.பி!
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் (07) காலைபதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடுதொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நாமல்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்முன்னிலையாகியிருந்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட தனது பாட்டிடெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தனக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் தான், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாவது என்பது ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
யாசகம் பெறுபவர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடிநடவடிக்கை!
யாசகம் பெறுபவர்களால் ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்காக பல்வேறு இடங்களிலும், சாலை மற்றும் மின்சாரசமிக்ஞைகளுக்கு அருகிலும் யாசகம் பெறுபவர்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். யாசகம் பெறுபவர்களினாலும் மற்றும் சாலையோர வியாபாரிகளின் நடவடிக்கை காரணமாகவும் நகரங்களில்போக்குவரத்து சீர்குலைவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சில யாசகர்கள் பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக இளம் குழந்தைகளுக்குபோதைப்பொருள் கொடுத்து, அவர்களை யாசகம் பெற அழைத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும்சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். சுற்றறிக்கையில், பணியில் இருக்கும் சில பொலிஸ் அதிகாரிகள், வீதிகளில் உள்ள யாசகர்கள் மற்றும் சாலையோரவியாபாரிகளின் நடத்தை குறித்து கவலைப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.