Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

எக்ஸ் தளத்தை விற்பனை செய்த எலோன் மஸ்க்

,

தொழிலதிபர் எலோன் மஸ்க் (Elon Musk) சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தை தனது சொந்த நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ. (xAI) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த விடயத்தை எலோன் மஸ்க் நேற்று இரவு (29) தனது எக்ஸ் தளத்தில் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, அவர் தனது எக்ஸ் நிறுவனத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எக்ஸ் ஏ.ஐ. நிறுவனம் எக்ஸ் தளத்தை வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்தை 80 பில்லியன் டொலர்களாகவும், எக்ஸ் தளத்தை 33 பில்லியன் டொலர்களாகவும் மதிப்பிடுகிறது.

எக்ஸ் மற்றும் எக்ஸ் ஏ.ஐ. ஆகியவற்றின் எதிர்காலம் ஒருங்கிணைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த இணைப்பு, எக்ஸ் ஏ.ஐ.யின் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன்களை எக்ஸ் தளத்தின் பரந்த பயனர் தளத்துடன் இணைத்து, சிறப்பான, ஆற்றல் மிகுந்த சேவையை மக்களுக்கு அளிக்க முடியும் ” என மஸ்க் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எக்ஸ் தளத்தில் X AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் தொழில்நுட்பமான ‘குரோக் 3’ ஏஐ (Grok 3 AI) அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது