Breaking News
மார்பர்க் வைரஸ் (Marburg virus): தான்சானியாவில் புதிய வைரஸால் 8 பேர் பலி!
.
தான்சானியாவில் மார்பர்க் வைரஸ் (Marburg virus) என சந்தேகிக்கப்படும் ஒரு தொற்றுநோயால் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
மார்பர்க் வைரஸ் (Marburg virus) தொற்றுக்குள்ளான 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மார்பர்க் வைரஸ் (Marburg virus) நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் மூலமாகவோ மக்களிடையே பரவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.