அண்ணன் தம்பியின் கொலைகளுக்கு பழி தீர்க்கும் வகையில் மன்னாரில் நடந்த துப்பாக்கி சூடு!
.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னர் உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து இரண்டு கிராமத்தவர்களிடையே மோதலாக உருவெடுத்தது.
மேலும் இதனை தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர் படுகொலை செய்து இருந்தனர்.குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக வருகை தந்த சந்தேக நபர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர்களால் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான நிலையில் இருவர் உயிரழந்துள்ள நிலையில் இருவர் ஆபத்தான நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தம் குடும்ப அண்ணன், தம்பியை கொன்ற அனைவரையும் கொல்லும் நோக்கில் அவர்களின் கொலைக்கு பின்னர் தொடர்ச்சியாகவே பல கொலைகள், தாக்குதல் நடந்து வருவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.இப்படி கொலை செய்வதன் ஊடாக மற்றவர்கள் கொலை செய்து விட்டு வெளியில் நடமாடுவோருக்கு தற்போது பயம் ஏற்பட்டு இருக்கிறது.
தமது அண்ணன், தம்பியின் கொலைகளுக்கு பழி தீர்க்கும் வகையில் நடந்த இந்த கொலைகள் போலவே வட்டுக்கோட்டையிலும் பழிவாங்கும் நோக்கில் கடந்த வருடம் ஒரு கொலை நடந்ததும் குறிப்பிடத்தக்கது.