தமிழர்களின் மண்டை கழுவுதல்.முற்றாக தமிழர்களை வீழ்த்த முடிவெடுத்திருக்கிறது சிங்களம்.
,
ஜேவிபியின் இரண்டு ஆற்றலையும் சாதகமாகப் பயன்படுத்தியே தமிழர்களை வீழ்த்த முடிவெடுத்திருக்கிறது சிங்களம்.
வல்வெட்டித்துறை கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்களைப் பார்த்து சிறீ லங்கா சனாதிபதி கேட்கிறார்,
"நாங்கள் பிரிந்திருக்க வேண்டுமா?"
அவருடைய எதிர்பார்ப்பு/விருப்பம்...
"வேண்டாம் வேண்டாம் வேண்டாம்!"
என மக்கள் கூட்டம் ஒரே தரத்தில் குரல் கொடுப்பார்கள், கொடுக்க வேண்டும் என்பது.
ஆனால் ஆயிரக்கணக்கில் குவிதிருந்த மக்கள் வெள்ளம் மௌனம் காக்கிறது.
சிலர் சோளம்பொரியோ, எதுவோ சாப்பிட்டபடி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சனாதிபதி மீண்டும் கேட்கிறார்,
"விலகி இருப்போமா?"
ஓரிரு அல்லக் கைகள், வேண்டாம் என்கின்றனர்.
அவ்வளவுதான்!
கூட்டத்தைச் சேர்த்த எடுபிடிகள் அந்தக் கூட்டத்தை ட்ரெயின் பண்ணிக் கொண்டு வரவில்லை.
அதற்காக அவர்கள் நிட்சயம் வாங்கிக் கட்டியிருப்பார்கள்.
ஆனால், அடுத்த முறை அந்தத் தவறைச் செய்ய மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்.
தேர்தல் பிரச்சரத்துக்கு வந்த போது தன் பேச்சில் அநுர ஒரு விடயம் சொன்னார்,
"இந்த நாட்டின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் அரசியல் தலைவர்கள்தான். நாங்கள் இனி அவர்களோடு பேசப் போறதில்லை. மக்களான உங்களோடுதான் நேரடியாகப் பேசப் போகிறோம்"
அந்தக் கூற்றின் ஆபத்தை எமது அரசியல்வாதிகள் எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் என்பது தெரியாது.
மக்களுடன் பேசுவதற்க்கு முன்னர், மக்களை முட்டாளாக்கி மடைமாற்றம் செய்யும் வேலைத் திட்டத்தைத்தான் இப்போது சிங்களம் மேற்கொண்டு வருகிறது.
ரோகண விஜயவீர மீதான சிங்கள இளைஞர்களின் கவர்ச்சிக்கு முக்கிய காரணம் அவரது பேச்சுத் திறன் ஆகும்.
ஜேவிபி சிங்களதேசத்தில் மேலே வருவதற்கு முக்கிய காரணம் ரோகண வழி அவர்கள் கற்றுக் கொண்ட பேச்சுத் திறன் ஆகும்.
அடுத்தது, மக்களோடு மக்களாகப் பழகும் அவர்களின் திறன்/உத்தி. Down to Earth.
இடதுசாரிப் பண்பாட்டைப் (போலியாகக் கூட) பின்பற்றுவர்களுக்கு இந்த ஆற்றல் இலகுவாக வந்துவிடும்.
ஜேவிபியின் இந்த இரண்டு ஆற்றலையும் சாதகமாகப் பயன்படுத்தியே தமிழர்களை வீழ்த்த முடிவெடுத்திருக்கிறது சிங்களம்.
ஏதோ யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் கடற்றொழில் நடப்பது போல் கடற்றொழில் அமைச்சர் யாழ்ப்பாணத்தின் மூலை முடக்கெல்லாம் போய் படுத்துக் கிடப்பதுவும் இந்த அடிப்படையில்தான்.
அர்ச்சுனா, தன்னை ஒரு சாதாரணன் போல் காட்டிக் கொண்டு "அடேய், பிடேய்" என்று கதைப்பதும் இந்த அடிப்படையில்தான்.
மொத்தமாக தமிழர்களின் மண்டையைக் கழுவி, தம் "தோழர்கள்" ஆக்கி பின்னர் போட்டுத்தள்ளுவது.