உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக வெளிவந்த முக்கியத் தகவல்!
,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக வெளிவந்த முக்கியத் தகவல்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிடுவதற்கு அசாத் மௌலானா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வருடம் செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மௌலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீர். மேலும் பல தகவல்களை வழங்க தயாராகவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அசாத் மௌலானா நாடு திரும்புவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அசாத் மௌலானா அரசியல் தஞ்சம் கோரி வெளிநாட்டில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அசாத் மௌலானா, சுயவிருப்பின் பேரில் நாடு திரும்பி தாமாக முன்வந்து உயிர்த்த ஞாயிறு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவிருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியின் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாக தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குகின்றது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அசாத் மௌலானா தொடர்பாகவும் அரசாங்கத்தின் பொய்யான பிரசாரம் தொடர்பாகவும் உதய கம்மன்பில கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தற்போது பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை மேற்கொண்டது இலங்கை புலனாய்வுத்துறை என்று செனல் 4 தெரிவித்திருந்தமை அனைவரும் அறிந்ததே. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இமாம் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அது குறித்த கடந்த ஒக்டோபர் மாதம் நாம் பகிரங்கப்படுத்தியிருந்தோம். அதில் பலவிடயங்களை தெரியப்படுத்தியிருந்தோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
இந்த தாக்குதல்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் அரசாங்கத்திற்குள்ளேயே உள்ளதனால் பிரதான சூத்திரதாரி என்ற பெயரில் ஒருவரை முன்னிறுத்தி உண்மையான குற்றவாளியை பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலானா செனல் 4 வுக்கு தெரிவித்திருந்தார். அவரை நாட்டிற்கு அழைத்துவந்து அவரிடம் பெறப்படும் வாக்குமூலத்திற்கு அமைய முன்னாள் அரசபுலனாய்வு பிரதானி சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்வதற்கான திட்டம் அரசாங்கத்திடம் காணப்படுகிறது”இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கோட்டபய, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோரை கைதுசெய்ய அரசாங்கம் அவதானம் - கம்மன்பில
உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. அசாத் மௌலானாவுக்கு எதிராக முறைப்பாடளிக்க பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அழுத்தம் பிரயோகித்ததாக குறிப்பிடுமாறு சாய்ந்தமருது பொலிஸார் அசாத் மௌலானாவின் மனைவிக்கு ஏன் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். இதன் பின்னணியில் உள்ள அரச சக்தி என்னவென்பதை அரசாங்கம் வெளிப்படையுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.