Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

1 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து வீடியோ எடுத்த தாய்.. சமூக ஊடகத்தில் நன்கொடை திரட்ட சித்ரவதை

,

சமூக ஊடகங்களில் கவனம் ஈர்க்கவும் நன்கொடை பெறவும் ஆஸ்திரேலிய பெண் ஒருவர் குழந்தைக்கு விஷம் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு உதவுகிறோம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டு சமூக ஊடகங்களில் பார்வைகள் மற்றும் நன்கொடைகளை குவிப்பதற்காக தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு ஆஸ்திரேலிய பெண் சிறுக சிறுக விஷம் கொடுத்துள்ளார்.

குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கோஸ்ட்டைச் சேர்ந்த 34 வயதான பெண், எந்த மருத்துவ அனுமதியும் இல்லாமல், அங்கீகரிக்கப்படாத மருந்துச் சீட்டுகளில் மூலம் மருந்தகத்திலிருந்து மருந்துகளை வாங்கி அந்த பெண், குழந்தைக்கு வழங்கியதாக காவல்துறை அறிக்கை கூறுகிறது.

மேலும் 2024, ஆகஸ்ட் 6 முதல் அக்டோபர் 15 வரை அந்தப் பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். பிரிஸ்பேனில் உள்ள மருத்துவமனை ஒன்று குழந்தையின் நிலை குறித்து சந்தேகமடைந்து போலீசில் புகார் அளித்ததை அடுத்து உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மாத்திரைகள் மற்றும் சிறுக சிறுக அளித்த விசஷத்தின்மூலம் நோய்வாய்ப்பட்டு பரிதாபமான நிலையில் இருந்த குழந்தையின் வீடியோக்களை எடுத்து GofundMe என்ற நன்கொடை வசூல் தளத்தை பயன்படுத்தி 37,000 ஆஸ்திரேலிய டாலர்களை அந்த பெண் நன்கொடை பெற்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

அந்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.