Breaking News
"தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை" - சௌமியா அன்புமணி ஆவேசம்!
.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட முயன்ற சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, சௌமியா அன்புமணி தலைமையில் பாமக மகளிர் அணி சார்பில், போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், தடையை மீறி போராடுவதற்கு தொண்டர்களுடன் வள்ளுவர் கோட்டம் வந்த சௌமியா அன்புமணியை காவலர்கள் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
முன்னதாக பேசிய சௌமியா அன்புமணி, ''குற்றவாளிகளை பிடிக்கக்கூட இவ்வளவு போலீஸ் வராத நிலையில், போராடுபவர்களை பிடிக்க ஏன் வருகிறார்கள்?'' என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். ''இன்னும் எத்தனை பெண்களை இந்த அரசாங்கம் பலி வாங்கப்போகிறது எனத் தெரியவில்லை. இதை கேட்க வந்தால் எங்களை கைது செய்கிறார்கள்'' என்றும் சௌமியா அன்புமணி ஆவேசமாக பேசினார்.