Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிகளை தமிழ் தேசிய பேரவை கைப்பற்றியுள்ளது.

திருவுளச் சீட்டு மூலம் ஞா. கிஷோர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிகளை தமிழ் தேசிய பேரவை கைப்பற்றியுள்ளது. நேற்று பிற்பகல், உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்ற தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தேர்வு நிகழ்வில் இந்த முடிவு எட்டப்பட்டது.

தவிசாளர் பதவிக்கு, தமிழரசு கட்சி சார்பில் அ. கயிலாயபிள்ளை மற்றும் தமிழ் தேசிய பேரவை சார்பில் வ. சிறிபிரகாஸ் முன்மொழியப்பட்டனர். 

பகிரங்க வாக்கெடுப்பில், தமிழரசு கட்சியின் வேட்பாளர் அ. கயிலாயபிள்ளை, தமிழரசு மற்றும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் ஆதரவுடன் 7 வாக்குகளைப் பெற்றார். 

அதேபோல், தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளர் வ. சிறிபிரகாஸும் 7 வாக்குகளைப் பெற்றார். இருவரும் சம வாக்குகளைப் பெற்றதால், திருவுளச் சீட்டு முறைமையின் மூலம் தவிசாளராக வ. சிறிபிரகாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

உப தவிசாளர் தேர்வில், தமிழரசு சார்பில் அ. பாலமயூரன் மற்றும் தமிழ் தேசிய பேரவை சார்பில் ஞா. கிஷோர் போட்டியிட்டனர். 

இவர்களும் சம வாக்குகளைப் பெற்ற நிலையில், திருவுளச் சீட்டு மூலம் ஞா. கிஷோர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தி நடுநிலை பேணியது. 

இந்நிலையில், தமிழ் தேசிய பேரவை சார்பில் சாவகச்சேரி நகர சபைக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரு பெண் உறுப்பினருக்கு நேற்று (13) நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது, அதற்கிடையில் இந்த தேர்வுகள் நடைபெற்றன. 

இந்த தேர்வு நிகழ்வின்போது, தமிழரசு கட்சி சார்பில் பிரதிச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சாயந்தனும், தமிழ் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.