Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழு பிரதமரை சந்தித்தது!

.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுவின் (HDP) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு 2025 ஆகஸ்ட் 27 அன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, பிரதமர், இலங்கையில் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, சட்டவாக்கத்தின் பலம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுத் (HDP) திட்டத்தின் பங்காளித்துவத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட HDP பிரதிநிதிகள், பாராளுமன்றத்துடன் முன்னெடுக்கப்படும் கண்காணிப்புச் செயல்முறை, குடிமக்களின் பங்களிப்பு மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் தொடர்பில் அவர்களது பங்களிப்பை பற்றிச் சுட்டிக்காட்டியதோடு,

இக்கலந்துரையாடலின் போது பாராளுமன்றத்திலும் தேசிய தலைமைத்துவத்திலும் பெண்களின் பங்களிப்பு மற்றும் தொழில் படையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung, பாராளுமன்ற ஜனநாயக ஒத்துழைப்பு குழுவின் (HDP) நிறைவேற்றுப் பணிப்பாளர் Derek Luyten,, பிரதமரின் செயலர் பிரதீப் சபுதந்திரி, பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலர் சாகரிகா போகாவத்த ஆகியோர் உட்பட வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுகளின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.