மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு! - பேரெழுச்சியோடு நடைபெற்று முடிந்தது.
தளபதிகளாக அண்ணன் அறிவித்த 234 வேட்பாளர்களில் ஒருவராக அம்மேடையில் அமர்ந்திருந்த உணர்வு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
பேரெழுச்சியோடு நடைபெற்று முடிந்தது நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு!
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இம்மாநாடு ஒரு மைல்கல். இன உணர்வும் கொள்கைப் பிடிப்பும் கொண்டு தன்னெழுச்சியாக திரண்டிருக்கிறது மாபெரும் மக்கள் கடல்.
15 வருடங்களாக சிறுக சிறுக கட்டியெழுப்பி விழ விழ சோர்ந்து போகாமல் திரும்பி எழுந்து நின்று உயிரான உறவுகள் இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி சமரசமற்ற போராளி அண்ணன் செந்தமிழன் சீமான் உறுதியூட்டி வளர்ந்து நிற்கிறது மாபெரும் தமிழ்தேசிய படை.
இப்படையின் தளபதிகளாக அண்ணன் அறிவித்த 234 வேட்பாளர்களில் ஒருவராக அம்மேடையில் அமர்ந்திருந்த உணர்வு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
மண் மீதும் மக்கள் மீதும் அளவற்ற அன்போடு, சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்திவிட துடிக்கும் போராட்ட உணர்வோடு களத்தில் இறங்கியிருக்கும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நேற்றைய மாநாட்டை நாடே வியக்கும் வகையில் ஒழுக்கத்துடனும், எழுச்சியுடனும், இராணுவ கட்டுப்பாட்டுடனும் நடத்த உதவிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும், இப்பெருங்கனவை நமக்கு கடத்திய அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும்,உலகெங்கிலுமிருந்து வந்து எம்மை வலிமைப்படுத்திய மானத்தமிழ் உறவுகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து குறிப்பாக என் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியிலிருந்து பெருந்திரளாக கலந்துகெண்ட உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசியல் களத்தில் தமிழ்தேசிய அரசியலின் எழுச்சிமிகு பயணத்தில் பங்களிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பிற்கு பெரும் நன்றியுணர்வுடனும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு தந்த பெரும் நம்பிக்கையுடனும்,அண்ணன் செந்தமிழன் சீமானின் வார்த்தைகள் தந்த ஊக்கத்துடனும் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய பயணத்தை தொடர்கிறேன் - மரிய ஜெனிபர்.


