Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணத்திலையை அதிகூடிய மழை வீழ்ச்சி !

மழை காரணமாக 04 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணத்திலையை அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் , மழையினால் 14 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும்,  யாழ் மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பதிவான மழை வீழ்ச்சியில் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 101.7 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.

அதேவேளை மழை காரணமாக 04 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களின் நான்கு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன
மேலும் கடந்த நாட்களாக யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் மழை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமையுடன் குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள போதிலும்,  எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் மழையானது 27 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்  உள்ளது.
கடற் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சூறாவளிக்கான எச்சரிக்கைகள்  விடப்படாத நிலையில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் கடற் தொழில் நடவடிக்கைகளின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.