Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

குழுக்களுக்கு பொறுப்பான உதவித் தெரிவாட்சி அலுவலர்களுடனான முன்னேற்றக் கலந்துரையாடல்.

.

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள  உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக குழுக்களுக்கு பொறுப்பான உதவித் தெரிவாட்சி அலுவலர்களுடனான முன்னேற்றக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில்  இன்றைய தினம் (29)  அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களுக்கு  குழுக்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கடமைகள் தொடர்பாகவும் அதன் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் அவர்களால் ஆராயப்பட்டது.

 பின்வரும் விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு மேலதிக அறிவுறுத்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர் அவர்களால் வழங்கப்பட்டது.

1.இதுவரை முறைப்பாடுப் பிரிவிற்கு கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கான நடவடிக்கைகளை கேட்டறிந்ததுடன், பொலிஸ் உத்தியோகத்தர்களின் மேலதிக ஆளணிகளையும் பெற்று இணைந்த வகையில்  நடவடிக்கைகளை  மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 

2.தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள பணியாட்களின் விபரங்கள் தொடர்பாகவும், களஞ்சிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து உரிய அறிவுத்தல்கள் வழங்கப்பட்டது. 

3.போக்குவரத்து வசதிகள் தொடர்பாக ஆராய்ந்து, தேர்தல் கடமைக்காக தேவைப்படும் வாகனங்களை உரிய காலப்பகுதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. 

4.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமையவுள்ள மண்டப ஒழுங்குகள் தொடர்பாக  ஆராயப்பட்டு, மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

5.உத்தியோகத்தர்களுக்கான நலனோம்பல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

6.பொது வசதிகள் குறிப்பாக குடிநீர், மலசல கூட வசதிகள் மற்றும் தங்குமிட வசதிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

7.தேர்தல் தொடர்பாக கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் ஒருங்கிணைப்பு செயற்பாடு தொடர்பாகவும் ஆராய்ந்து உரிய அறிவுத்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலரால் வழங்கப்பட்டது. 

மேலும், இக் கலந்துரையாடலில் மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக   பிரதித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் வழங்கப்பட்டது.