உயர்தர பரீட்சையில் மன்னாரில் முதலிடம் பிடித்த மாணவி, வவுனியாவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள்!
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26) வெளியாகின.

உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி முதல் இடம்பிடித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26) வெளியாகின.
அதில் கலை பிரிவில் மன்னார் கல்வி வலயத்தை சேர்ந்த மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 84 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வவுனியாவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள்!
உயர் தர பரீட்சையில் கணிதப் பிரிவில் வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவன் குகதாசன் தனோஜன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (26) வெளியாகின.
அதில் கணிதப் பிரிவில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற குகதாசன் தனோஜன் என்ற மாணவன் மூன்று பாடங்களில் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 144 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
குறித்த பாடசாலையின் வரலாற்றில் மாணவன் ஒருவன் முதலாம் இடத்தை பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உயர்தர பரீட்சையில் கலைப் பிரிவில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி முகம்மது பைசல் பாத்திமா அஸ்ரா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவி தமிழ், அரசியல், பொருளியல் ஆகிய பாடங்களில் 3, ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 94 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.