Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

01 ஆம் திகதி ஆவணி 2007 அதிகாலை பொழுதில் வீட்டில் பெற்றோருக்கு முன்னால் படுகொலை செய்யப்பட்ட சகாதேவன் நிலக்சன்!

சகாதேவன் நிலக்சன் அவர்களின் தந்தையார் தனது மகன் கொலை தொடர்பாக இவ்வாறு வாக்குமூலம்!

விடிகாலை 5.30 மணியளவில் கொக்குவிலில் உள்ள எமது வீட் டின் முன்புறக் கதவை  கடந்து பாய்ந்து  மூவர் உள்ளே வந்தனர். 
அவர்கள் வீட்டின் கதவைத் திறக்கும்படி கோரினர்.நாம் மறுத்தோம்.
வந்தவர்கள் கதவை உடைத்துத் திறந்து உள்ளே புகுந்தனர். 
எமது இரு மகன்மாரினதும் பெயர்களைக் கேட்டனர். நாம் பெயர்களைக் கூறினோம்.
இளைய மகனான நிலக்ஷனுடன் தாங்கள் பேச வேண்டியுள்ளது எனத் தெரிவித்து அவரை வெளியே அழைத்துச் சென்றனர். 
எங்களை வீட்டுக்கு வெளியே வரக்கூடாது என்றும் அவர்கள் பணித்தனர்.
வீட்டு "போர்ட்டிக்கோ'வில் வைத்து அவர்கள் உரையாடும் சத்தம் கேட்டது. 
சிறிது நேரத்தில் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அவர்கள் முன் "கேற்'றைப் பாய்ந்து ஓடி னார்கள். 
மகன் சுடுபட்டு விழுந்து கிடந்தார்.
வந்தவர்களில் ஒருவர் நீளக் காற்சட்டை யும் சேட்டும் அணிந்திருந்தார். 
மற்றைய இருவரும் அரைக் காற்சட்டையும் சேட்டும் அணிந்திருந்தனர் 
யாழ்ப்பாண குடாநாட்டில்  இராணுவ ஊரடங்கு அமுலிலிருந்த  01 ஆம் திகதி ஆவணி 2007 அதிகாலை பொழுதில் வீட்டில் பெற்றோருக்கு முன்னால்  படுகொலை செய்யப்பட்ட சகாதேவன் நிலக்சன் அவர்களின் தந்தையார் தனது மகன் கொலை தொடர்பாக இவ்வாறு வாக்குமூலம் வழங்கியிருந்தார் 
யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் ஊடக கற்கை மாணவர் ஒருவர் இராணுவத்தினரால் ஊரடங்கு வேளையில் படுகொ*லை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் கடந்தும் எந்த நீதியும் இல்லை 
குறிப்பிட்ட காலத்தில் யாழ்ப்பாண இராணுவ தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சந்திரசிறி சகாதேவன் நிலக்சன் உட்பட 2005-2009 வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அத்துணை அட்டூழியங்களுக்கும் பொறுப்பு கூற வேண்டிய கிரிமினல் ஆவர்.
ஆனால் கடந்த கால ஆட்சியாளர்கள் மேஜர் ஜெனரல் சந்திரசிறியை வடக்கு மாகாண ஆளுநராக , இலங்கை வங்கி பணிப்பாளர் சபை உறுப்பினராக ,Airport and aviation services (sri lanka) PVT  LTD தலைவராக நியமித்து அழகு பார்த்தார்கள் 
இப்போது ஜேவிபி கோமாளிகள் புது அவதாரம் எடுத்து இராணுவத்தினரின்  systemic crimes யிலிருந்து பாதுகாகாக்க இராணுவத்தின் கருவியாக இருந்த  பிள்ளையான் தலையில் எல்லாவற்றையும் சுமத்தி நாடகமாடுகின்றார்கள் 
இது போதாதென்று வடக்கில் இராணுவத்தின் கருவியாகவிருந்த டக்ளஸ் தேவானந்தா முதல் அருண் சித்தார்த் வரை திட்டமிட்டு பாதுகாக்கின்றார்கள்.