Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இன்று முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆரம்பிக்கப்படும் புதிய வசதி!

.

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

நாட்டில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து சேவையை எளிதாகவும் மற்றும் வேகமாகவும் மாற்றுவதற்கு அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி இந்த நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் 35 இடை மாறல்கள் மற்றும் 119 வௌியேறும் வாயில்களில் குறித்த சேவை வசதிகள் செயற்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருநாகல் பகுதியின் வெளியேறும் வாயில்களில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.