Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம்!

தலைமுறைகள் கடந்து வாழும் எம் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள்.

தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்படும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது

தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுபற்றாளர்களையும்  மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு அமைக்கின்றது இம்முறை நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

தலைமுறைகள் கடந்து வாழும் எம் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள்.உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்து விட்டுச் செல்லுங்கள் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை நினைவாலயத்தை அமைக்கும் பணிகள் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞரணியால் முழு வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

யாழில் தொடரும் மழை காரணமாக நினைவாலயம் அமைக்கப்படும் பகுதிக்குள் வெள்ள நீர் உட்புகாத வகையில் , மண் மூடைகள் அடுக்கப்பட்டு , மண் நிரவப்பட்டு வருகிறது.

00-3-1.jpg?resize=800%2C343&ssl=1

https://globaltamilnews.net/2025/222813/