வரலாற்று சிறப்புமிக்க கோணேச்சர சிவன் சிலையை பேரினவாதிகளிடமிருந்து காப்பாற்றியர் இளஞ்செழியன்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச்சிறப்புடைய திருக்கோணேச்சரம் ஆலயம்!
1996 ல் தனது சொந்த கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்பி நாலந்த எல்லாவல( வயது 29) என்பவரை அரசியல் போட்டி காரணமாக இரத்தினபுரியில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவர் முன்னாள் அமைச்சர் புஞ்சிநிலமே.
ராஜபக்ச குடும்பத்தின் விசுவாசியாகவும் , தீவிர சிங்கள பேரினவாதியாகவும் அறியப்படுகின்ற புஞ்சிநிலமே இரத்தினபுரி சிங்கள மக்களால் வெறுக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதால் திருகோணமலை நோக்கி தனது இனவாத அரசியலை முன்னெடுத்த புஞ்சிநிலமே அங்கு வெற்றி பெற்று மகிந்த ராஜபக்சவின் அரசில் இராஜாங்க அமைச்சராக செயற்பட்டார்.
தமிழர்களின் பூர்வீக தலைநகரான திருக்கோணமலையை முழுமையாக அபகரிப்பதற்காக பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்த புஞ்சிநிலமே கோணேச்சரம் சிவன் கோயிலுக்கு செல்லும் பாதையில் நடைபாதை கடைகளை அபகரித்து தனது உறவினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வழங்கினார்.
தொல்லியல் திணைக்களம் ஊடாக கோணேச்சரம் சிவன் கோயிலை கதிர்காமம் ( கத்தரகம) முருகன் கோயில் போன்று பௌத்த ஆளுகைக்கு உட்பட்ட ஆலயமாக மாற்றுவதே அவரது ஒரே இலக்கு.
இந்நிலையில் இனப்படுகொலை யுத்தம் நிறைவுற்ற காலப்பகுதியில் திருக்கோணமலை கோணேச்சரம் கோவில் முன்றலில் பாரிய சிவன் சிலையொன்றினை ஆலய நிர்வாகமும் அடியார்களும் அமைக்க முற்படும்போது தொல்லியல் திணைக்களத்தினை ஏவி அதனை தடுத்து நிறுத்தியதோடு நேரடியாக இடையூறுகளை ஏற்படுத்தினார் புஞ்சிநிலமே.
அப்போது திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன். அவரது கவனத்திற்கு இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தனது பதவியின் எல்லையை கடந்து இரவிரவாக அங்கேயே நின்று அந்த அழகிய பாரிய சிவன் சிலையை அமைப்பதற்கு உறுதுணையாய் நின்றார் நீதி தேவன் இளஞ்செழியன். இன்று யூடியுப் தளத்தில் அரசியல் பேசுபவர்களுக்கும் அதனை பார்த்து அரசியல் படிப்பவர்களுக்கும் இந்த வரலாறு தெரிய வாய்ப்பில்லை.
சிறப்புமிக்க ஒரு புனிதத்தலமான திருக்கோணேச்சரம் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 33 அடி உயரமான சிவனின் சிலை 15-12-2011 அன்று காலை 10.35 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச்சிறப்புடைய இந்த ஆலயத்தில் இராவணன்வெட்டுக்கு அருகில் புதியதொரு தியான மண்டபமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெரிய லிங்கமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கோணேச்சரம் ஆலய சிவன் சிலை அமைப்பதை பேரினவாதி புஞ்சிநிலமே தடுத்தபோது அதனை களத்தில் இறங்கி செய்து முடித்தவர் மதிப்புக்குரிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஐயா. அதேபோன்று தமிழ் மன்னன் இராவணனால் திருகோணமலை கன்னியா பிரதேசத்தில் அமைக்கப்பட்ட ஏழு வெந்நீர் ஊற்றுக் கிணறுகளையும் அங்கு காணப்படுகின்ற சைவ ஆலயத்தினையும் அபகரித்து பௌத்த சின்னமாக்க முயன்ற போதும் நீதியின் காவலன் இளஞ்செழியன் அவர்களினாலேயே அதனை காப்பாற்ற முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசிய அரசியலில் அவரது களமிறக்கம் ஊடாகவே தமிழர் தாயகமான வடக்கையும் , கிழக்கையும் காப்பாற்ற முடியும். ஏனெனில் அவரது வருகை மூலமாகவே தமிழ்த் தேசிய அரசியல் ஒற்றுமைப்படும் , எழுச்சியடையும் என்று தமிழ்த் தேசிய பேரவையின் பிரமுகரும் ஜனநாயக தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான திரு.கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.


