தமிழீழத் தேசியக்கொடி என்பது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களினது தனித்த தேசிய அடையாளம்.
தமிழீழத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு தனித்த தேசிய இனம் என்பதை வெளிப்படுத்துவதற்கு, தமிழீழத் தேசியக் கொடியை ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளின் போதும் ஏற்றி வருகின்றனர்.
தமிழீழத் தேசியக் கொடி தொடர்பான ஒரு சர்ச்சை கனடாவில், ஒரு கும்பலால், எழுப்பப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.
தமிழீழத் தேசியக்கொடி என்பது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர் தமது தனித்த தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் 1990-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்ததாகும்.
இன்று உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் தாம் வாழும் நாடுகளில், தாம் தமிழீழத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு தனித்த தேசிய இனம் என்பதை வெளிப்படுத்துவதற்கு, தமது தாயகத்தின் கொடியான, தமிழீழத் தேசியக் கொடியை ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளின் போதும் ஏற்றி வருகின்றனர்.
GONIFA Asia Cup London 2025-ஆம் ஆண்டின் உதைபந்தாட்ட நிகழ்வின்போது, ஐக்கிய இராச்சியத்தின் கொடிக்கு நிகராகத் தமிழீழத் தேசியக் கொடியும் வானில் பட்டொளி வீசிப் பறந்த தருணம்!
இதனை, இலங்கைச் சிங்களத் தரப்பு மூன்றாம் ஒரு தரப்பின் உதவியுடன் புலிகளின் கொடியாகச் சித்தரிக்க முற்பட்டுள்ளது. இதில், சிங்களத் தரப்பு மட்டுமல்லாமல் வேறு சக்திகளும் பின்னால் உள்ளன என்பதைத் தமிழர் கவனத்தில் கொண்டு காய்நகர்த்த வேண்டும். தமிழீழத் தேசியக் கொடி என்பது ஈழத்தமிழரின் தனித்த தேசிய அடையாளமாகும். அதனைக் காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்பதை மறவாதீர்கள்.
தற்போதிருக்கும், பாயும் புலியின் முகத் தோற்றம் கொண்ட கொடியானது, சோழர் காலத்து புலிக்கொடியின் மாற்று வடிவமாகும். அது ஈராயிரம் (2000) ஆண்டுகளுக்கு முற்பட்ட நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதும் ஆகும்.
குறிப்பு: தமிழீழத் தேசியக் கொடியும் புலிகளது கொடியும் ஒன்றல்ல. இயக்கத்தின் கொடி என்பது 1977-ஆம் ஆண்டு முதல் 2009 இறுதிப் போர் வரை ஏற்றப்பட்டது. ஆனால், தமிழீழத் தேசியக் கொடியில் இயக்கத்தின் கொடியில் இருப்பது போன்று எழுத்துகள் இருக்காது. அது 1990-ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர் தமது தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுத்தும் கொடியாகும்.
- ச.தங்கவடிவேல்


